குணநாற்பது

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
குணநாற்பது
என்னும் பெயர்கொண்ட நூல் ஒன்றைத்
தொல்காப்பிய உரையில்
இளம்பூரணர் குறிப்பிட்டுப்
பாடல் ஒன்றை மேற்கோளாகத் தந்துள்ளார்.
அந்தப் பாடல் இது.
மருந்தின் தீரா என்னும் தொடரில் தொடங்குகிறது.
விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:

மருந்தின் தீரா[தொகு]

மருந்தின் தீரா மண்ணின் ஆகாது
அருந்தவ முயற்சியின் அகற்றலும் அரிதே
தான்செய் நோய்க்குத் தான்மருந் தாகிய
தேன்இமிர்நறவின் தேறல் போல
நீதர வந்த நிறைஅருந் துயரம்நின்
ஆடுகொடி மருங்கின் அருளின் அல்லது
பிறிதில் தீரா தென்பது பின்நின்று
அறியக் கூறுதும் எழுமோ நெஞ்சே
நாடுவளங் கொண்டு புகழ்நடுதல் வேண்டித்தன்
ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த
பொற்கை நறுந்தார்ப் புனைதேர் பாண்டியன்
கொற்கைஅம் பெருந்துறை குனிதிரை தொகுத்த
விளங்குமுத்து உறைக்கும் வெண்பல்
பன்மாண் சாயல் பரதவர் மகட்கே.

நூல் குறியீடு[தொகு]

தொல்காப்பியம் நூல் முழுமைக்கும் உரை எழுதியுள்ள இளம்பூரணர் பொருளதிகாரம், களவியல் பகுதிக்கு உரை எழுதுகையில் களவியல் என்பதற்கு விளக்கம் தருகையில் இந்த நூ3லையும், இந்த நூலிலுள்ள பாடல் ஒன்றையும் மேற்கோளாகத் தந்துள்ளார்.

பாடல் தரும் செய்தி[தொகு]

பரதவர் மகளுக்கு முத்துப்போல் பல்
முத்து கொற்கை முத்து
கொற்கை பொற்கைப் பாண்டியனுக்கு உரியது
பொற்கைப் பாண்டியன் தன் கையை அறுத்து முறை செய்தவன் (கதவைத் தட்டிய கள்வனின் கையை அறுக்கவேண்டும் என அவையோர் கூறிய தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு)

தலைவன் கூறுகிறான்

தலைவியால் வந்த காமநோய் இது
மருந்தால் இதனைக் குணப்படுத்த முடியாது
நீரில் குளித்தாலும் தீராது
தவம் செய்தும் தீர்த்துக்கொள்ள முடியாது
அவள் செய்த நோய்க்கு அவளே மருந்து.
இது தேன் ஈ கடிக்காமல் கிடைத்த தேன் போல் இனிமையானது.

தலைவன் தன் நெஞ்சை எழுப்புகிறான் அதாவது தீர்மானிக்கிறான்

நீ தந்ததால் வந்த நோய் இது.
(வேலி ஓரத்தில்) கொடி ஆடும் இடத்தில் நீ உன்னைத் தந்தால் தீர்ந்துவிடும்
இவ்வாறு தலைவியிடம் சொல்லிவிடலாம். வா! நெஞ்சே!

குனிகா யெருக்கின்[தொகு]

642

குனிகா யெருக்கின் குவிமுகிழ் விண்டலொடு
பனிவார் ஆவிரைப் பன்மலர் சேர்த்தித்
தாருங் கண்ணியுந் ததைஇத் தன்னிட்டு
ஊரும் மடவோன் உலர்வன் கொல்லென
நீர்த்துறைப் பெண்டிர் நெஞ்சழிந் திரங்கினும்
உணரா ளூர்தோறு
அணிமடற் கலிமா மன்றத் தேறித்தன்
அணிநலம் பாடினும் அறியா ளென்றியான்
பெருமலை நெடுங்கோ டேறிப் பெறுகென்று
உருமிடித் தீயின் உடம்புசுடர் வைத்த
என்னுறு விழுமம் நோக்கிப் பொன்னொடு
திருமணி இமைக்குங் கோடுயர் நனந்தலை
இரவுடைப் பெண்டிர் இடும்பை நோக்கித்
தெளிவுமனங் கொண்ட தீதறு காட்சி
வெளியன் வேள்மான் விளங்குகரி போல
மலிகடல் உடுத்த மணங்கெழு நனந்தலைப்
பலபா ராட்டவும் படுவ மாதோ
கடைந்து கவித்தன்ன கால்வீங்கு கருங்கட்
புடைதிரள் வனமுலை புலம்பல் அஞ்சிக்
காமல் நுழைநுண் நுசுப்பின்
தாமரை முகத்தியைத் தந்த பாலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=குணநாற்பது&oldid=1052077" இலிருந்து மீள்விக்கப்பட்டது