சிறிய அளவிலான பக்க வாதம் (Minor Stroke)
Wikisource தளத்திலிருந்து
டொக்டர்.எம்.கே.முருகானந்தன் வாய் கொன்னித்தல். ஒரு பக்கம் கையும் காலும் செயலிழந்து போதல் போன்றவை போன்றவை பக்கவாதத்தின் (Stroke) அறிகுறிகள். இப்படி வருவதில் சில அன்றோ அல்லது ஒரு சில மணி நேரங்களில் குணமாகிவிடும். ஆயினும் மீண்டும் வரலாம்.
இவ்வாறு ஏற்படுவதை சிறிய அளவிலான பக்க வாதம் (Minor Stroke) என்பார்கள். மருத்துவத்தில் 'தற்காலிகமாகத் தோன்றி மறையும் நாடி அடைப்பு' ( Transient Ischemic attack-TIA) என்பார்கள். அத்தகைய சிறிய பக்க வாதம் வந்தவர்களில் பத்து சதவீதத்தினருக்கு மீண்டும் அத்தகைய சிறிய பக்கவாதம் அல்லது பாரிய அத்தகைய பக்க வாதம் ஓரிரு வாரங்களுக்குள் வரக் கூடும் என்பது 20 வருடங்களுக்கு மேலாக மருத்துவ ரீதியாகத் தெரிந்த செய்தியாகும். ஆயினும் பெரும்பாலான மேலை நாடுகளில் கூட இத்தகையவர்களுக்கு வெளி நோயாளர் சிசிச்சையே அளிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.
இது தவறு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டால் அது மீண்டும் வருவதற்கான சாத்தியம் குறைந்து விடும் என 1314 பேரைக் கொண்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்த டாக்டர் பீற்றர் ரொத்வெல் கூறுகிறார்.
நோய்க்கு முன்னும் பின்னுமாக 5 வருடங்களாகச் செய்த ஆய்வு இது. இந்த ஆய்வின் போது நோயற்றவர்களுக்கு உடனடியாக 300 மி.கி. அஸ்பிரினும் 300 மி.கி குளொபிடோகிரல் (clopidogrel) மருந்தும் கொடுக்கப்பட்டது. இவற்றிற்கு இரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. இவை தொடர்ந்து கொடுக்கப்பட்டதோடு கொலஸ்டரோலைக் குறைக்கும் மருந்தான சிம்வஸ்டடின் 40 மி.கி மருந்தும் தேவை ஏற்படும் போது இரத்த உறைதலைத் தடுக்கும் விசேட மருந்துகளும் கொடுக்கப்ட்டன. இவ்வாறு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட 656 பேரில் ஒருவருக்குக் கூட நோய் திரும்ப வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தீவிர சிகிச்சை அளிக்கப்படாத 658 பேரில் ஒன்பது பேருக்கு திரும்ப வந்தது.
எனவே நாம் செய்ய வேண்டியது என்ன? சிறிய பக்க வாதம் (?Minor Stroke)யாருக்காவது வந்தால் உடனடியாக ஒரு அஸ்பிரின் மாத்திரையைக் குடிக்கக் கொடுத்து விட்டு வைத்தியரிடம் கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிப்பதுதான். குடிக்க கொடுக்க வேண்டியது அஸ்பிரின் அல்லது டிஸ்பிரின் மாத்திரைதான், பரசிட்டமோல் அல்ல என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அஸ்பிரின் மாத்திரைக்குதான் இரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

