நற்றிணை
விக்கிமூலம் இருந்து
- 0. கடவுள் வாழ்த்து
- பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்
- 2. இடியினும் கொடியதாகும்?
- பாடியவர்: பெரும்பதுமனார்
- திணை: பாலை
- துறை: உடன்போகா நின்றாரை இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது
-
- அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து,
- ஓலிவல் ஈந்தின் உலவை யங்காட்டு,
- ஆறுசெல் மாக்கள் சென்னி எறிந்த
- செம்மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
- வல்லியப் பெருந்தலைக் குறுளை, மாலை,
- மானோக்கு இண்டிவர் ஈங்கைய, சுரனே;
- வையெயிற்று ஐயள் மடந்தை முன்னுற்று
- எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,
- காலொடு பட்ட மாரி
- மால்வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே!
- 3. சுடரொடு படர் பொழுது!
- பாடியவர்: இளங்கீரனார்
- திணை: பாலை
- துறை: முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன், பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.
-
- ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினைப்
- பொரியரை வேம்பின் புள்ளிநீழல்
- கட்டளை அன்ன இட்டரங்கு இழைத்துக்
- கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
- வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்ச்
- சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை
- உள்ளினேன் அல்லெனோ, யானே - உள்ளிய
- வினைமுடித் தன்ன இனியோள்
- மனைமாண் சுடரொடு படர்பொழுது எனவே?
- 4. கொண்டு செல்வாரோ
- பாடியவர்: அம்மூவனார்
- திணை: நெய்தல்
- துறை: தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது.
-
- கானலஞ் சிறுகுடிக் கடல்மேம் பரதவன்
- நீனிறப் புன்னைக் கொழுநிழல லசைஇத்
- தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி
- அந்தண் அரில்வலை உணக்குந் துறைவனொடு
- அலரே, அன்னை யறியின் இவணுறை வாழ்க்கை
- அரிய வாகும் நமக்கெனக் கூறிற்
- கொண்டுஞ் செல்வர்கொல் தோழி உமணர்
- வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக்
- கணநிரை கிளர்க்கும் நெடுநெறிச் சகடம்
- மணல்மடுத் துரறும் ஓசை கழனிக்
- கருங்கால் வெண்குருகு வெரூஉம்
- இருங்கழிச் சேர்ப்பிற்றம் உறைவின் ஊர்க்கே.
- 4. பிரிதல் அரிதே
- பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்
- திணை: குறிஞ்சி
- துறை: தலைவனின் செலவுக்குறிப்பறிந்து, வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.
-
- நீலம்நீர் ஆரக் குன்றம் குழைப்ப
- அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர்கால் யாப்பக்
- குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர்
- நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்பப்
- பெரும்பெயல் பொழிந்த தொழில எழிலி
- தெற்கேர்பு இரங்கும் அற்சிரக் காலையும்
- அரிதே, காதலர்ப் பிரிதல் - இன்றுசெல்
- இளையர்த் தரூஉம் வாடையொடு
- மயங்கிதழ் மழைக்கண் பயந்த தூதே.
- 4. 'இவர் யார்?' என்னாள்
- பாடியவர்: பரணர்
- திணை: குறிஞ்சி
- துறை: இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாகிய தலைவன், தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
-
- நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்
- நார்உரித் தன்ன மதனில் மாமைக்
- குவளை யன்ன ஏந்தெழில் மழைக்கண்
- திதலை அல்குற் பெருந்தோள் குறுமகட்கு
- எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே!
- 'இவர்யார்?' என்குவன் அல்லள்; முனாஅது
- அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
- எறிமட மாற்கு வல்சி ஆகும்
- வல்வில் ஓரி கானம் நாறி
- இரும்பல் ஒலிவரும் கூந்தல்
- பெரும்பே துறுவள்யாம் வந்தனம் எனவே!