பெருங்கதை/1 34 யாழ் கை வைத்தது

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

பிரச்சோதனன் செயல்[தொகு]

பொழிறலைப் பெயர்ந்த புலம்புகொல் காலை
எழின்மணி விளக்கி னேம்மஃ போகிக்
கலையினுங் களியினுங் காமுறக் கவைஇய
மழலைக் கிண்கிணி மடவோர் மருட்டப்
புரிதார் நெடுந்தகை பூவணை வைகிய 5
திருவீழ் கட்டிற் றிறத்துளி காத்த
வல்வேற் சுற்றத்து மெய்ம்முறை கொண்ட
பெயர்வரி வாசனை கேட்டபி னுயர் திறல்
ஊழி னல்லது தப்புத லறியார்
காலனுங் கடியு நூலொண் காட்சியர் 10
யாக்கை மருங்கிற் காப்புக் கடம் பூண்
டருந்துறை போகிய பெருந்தகை யாளர்
உணர்வு மொளியு மூக்கமு முணர்ச்சியும்
புணர்வின் செலவமும் போகமுஞ் சிறப்ப
அமிழ்தியல் யோகத் தஞ்சனம் வகுத்துக் 15
கமழ்கொள் பூமியிற் கபிலைமுன் னிறீஇ
மகடூஉத் துறந்த மாசறு படிவத்துத்
துகடீ ராளர்க்குத் துளக்கிய முடியன்
மலர்க்கண் ணளைஇய மந்திர நறுநீர்
பலருடன் வாழ்த்தப் பண்புளி யெய்திப் 20
பால்பரந் தன்ன வால்வெள் விதானத்து
மாலை தொடர்ந்த மங்கல்ப் பந்தர்
விரிநூ லந்தணர் வெண்மணை சூழ்ந்த
திருமணிக் கட்டிற் றிறத்துளி யெய்தி
அறநிலை பெற்ற வருள்கொ ளவையத்து 25
நிறைநூற் பொத்தக நெடுமணை யேற்றி
வல்லோர் வகுத்த வாசனை வாக்கியம்
பல்லோர் பகரப் பயம்பல பருகித்
தரும விகற்பமொடு தானை யேற்பும்
கரும விகற்பமொடு காம்முங் கெழீஇய 30
இன்பக் கேள்வி இனிதுகொண் டெழீஇத்
துன்ப நீங்குந் தொழின்முறை போக்கி
முடிகெழு மன்னரொடு முற்றவை நீங்கிக்
கடிபெருங் கோயிலுட் காடசி விரும்பி
உதயண குமரனை யுழைத்தரல் விரைந்தென 35
உழைநிரை யாள ரோடின ரிசைப்ப

உதயணன் செயல்[தொகு]

இழையணி யிரும்பிடி யெருத்த மேறிக்
கடையணி யாவணங் கைதொழப் போதந்
தெறிவேற் பெருங்கடை யியைந்தன னிற்பத்

பிரச்சோதனன் உதயணனை உபசரித்தல்[தொகு]

தருமணன் முற்றத்துத் தானெதிர் சென்று 40
திருமணி யம்பலங் கொண்டொருங் கேறி
இரட்டைத் தவிசி னிருக்கை காட்டி
இசைக்க வேண்டா விதையுன தில்லெனச்
சிறப்புடைக் கிளவி செவ்விதிற் பயிற்றித்
தளரிய லாயமொடு தன்புடை நின்ற 45
பணியோள் பற்றிய பவழச் செப்பின்
வாச நறுந்திரை வகுத்துமுன் னீட்டித்
தாமரை யங்கையிற் றான்பின் கொண்டு
குறிப்பி னிருக்க குமர னீங்கென
மடக்கிடன் மனமொடு மாணகர் புக்குத் 50

பிரச்சோதனன் சிவேதனிடம் கூறல்[தொகு]

தான்பயில் வீணை தங்கையு மொருத்தி
காண்குறை யுடைமையிற் கவலு மாதலின்
வல்லோர்ப் பெறாது தொல்குறை யுழத்தும்
தாயும் யானு மெந்தை யாதலிற்
றீதொடு வரினுந் தீர்த்தறன் கடனென 55
மதியொண் காட்சி மாமுது சிவேதனை
இதுநங் குறையா விசைத்தி சென்றென

சிவேதன் உதயணனுக்குக் கூறல்[தொகு]

நல்வினை யம்பலத் திருந்த நம்பிக்கு
வல்லிதி னக்குறை யுரைத்த பின்னர்

உதயணன் செயல்[தொகு]

அதற்கோ ருபாய மறியா திருந்தோன் 60
மகட்குறை யுணர்ந்து மன்னவன் விடுத்த
திருமணி வீணை யிசைத்தலுந் தெருமந்
தொருநிலை காறு முள்ளே யொடுக்கி
விழுப்பமொடு பிறந்த வீறுயர் தொல்குடி
ஒழுக்கங் காணிய வுரைத்ததை யொன்றுகொல் 65
ஒளிமேம் பட்டன னொன்னா னென்றெனை
அளிமேம் படீஇய வெண்ணிய தொன்றுகொல்
உள்ள மருங்கி னுவந்தது செய்தல்
செல்வ மன்னவன் சீலங் கொல்லோ
யாதுகொன் மற்றிவ் வேந்தல் பணியென 70
நீதி மருங்கி னினைவ வ்வன்சூழ்ந்
தியாதெனப் படினும் படுக விவன்பணி
மாதரைக் காட்டுதன் மங்கல மெனக்கென
நெஞ்சு… தங்கூறி
அஞ்சொ லாயத் தன்றியான் கண்ட 75
தாமரை முகத்தி தலைக்கை யாகப்
பல்பெருந் தேவியர் பயந்த மகளிருள்
நல்லிசை யார்கொ னயக்கின் றாளெனச்
\சொல்லினன் வினவுஞ் சுவடுதனக் கின்மையின்
யாரே யாயினு மிவன்மக ளொருத்தியைச் 80
சீர்கெழு வீணை சிறப்பொடு காட்டிப்
பயிற்சி யுள்வழிப் பல்லோர் வருதலின்
அழித்து மொருநா ளன்றியான் கண்ட
கதிர்மதி முகத்தியைக் காண்டலு முண்டென
முதிர்மதிச் சூழ்ச்சியின் முற்ற நாடிச் 85
செய்யே னாகிச் சிறுமை நாணின்
உய்யே னாத லொருதலை யதனால்
உயிர்கெட வருவழி யொழுக்கங் கொள்ளார்
செயிரறு கேள்வி தேர்ந்துணர்ந் தோரென
வெல்லினுந் தோற்பினும் விதியென வகுத்தல் 90
பொருணூ லாயும் புலவோர் துணிவென
மதிவழி வலித்த மனத்த னாகி
என்னிதற் படுத்த நன்னுதன் மாதரைப்
பேரும் பெற்றியுந் தேரு மாத்திரம்
நேர்வது பொருளென நெஞ்சுவலி யுறீஇச் 95
செறுநரைப் போலச் சிறையிற் றந்துதன்
சிறுவரைப் போலச் செய்தோன் முன்னர்த்
தவன்முறை யாயினுந் தன்மன முவப்பன
இயன்முறை யாற்றி யென்கடன் றீர்ந்த
பின்ன ராகுமென் பெயர்முறை யென்ன 100
ஆன்பாற் றெண்கட லமுதுற வளைஇய
தேன்பெய் மாரியிற் றிறவ தாகப்
பருகு வன்ன பயத்தொடு கெழீஇ
உருகு வன்ன வுவதைய னாகி
இறந்தன னிவனென் விளிப்பரந் துறாது 105
சிறந்தன னிவனெனச் செவ்வ நோக்கிக்
கடந்தலை வைக்குங் கால மிதுவென
அவன்றலை வைக்கு மாணை யேவலும்
உவந்ததை யெல்லா முரைமி னீரெனப்
பேர்ந்தன்னஃ விடுப்பப் பெருமூ தாளன் 110
நேர்ந்ததை யெல்லா நெடுந்தகைக் குரைப்பத்

பிரச்சோதனன் செயல்[தொகு]

திருமலி யாகத்துத் தேவியர் பயந்த
நங்கைய ருள்ளு மங்கை முற்றாப்
பெதும்பை யாயத்துப் பேதையர் வருகெனப்
பளிக்கறைப் பூமியும் பந்தெறி களத்தும் 115
மணிக்கயிற் றூசன் மறலிய விடத்தும்
கொய்ம்மலர்க் காவும் பொய்கைக் கரையும்
அந்தக் கேணியும் வந்துபெயர் கூவித்
தவ்வை மகளிருந் தாய்கெழு பெண்டிரும்
அவ்வழி யாயமு நொய்தகப் படுப்ப 120
முத்தின ருத்தியர் மும்மணிக் காசினர்
கச்சினர் கண்ணியர் கதிர்வெள் வளையினர்
சில்கலத் தியன்ற வணியின ரல்லது
பல்கலஞ் சேரா மெல்லென் யாக்கையர்
அசைவில் குமரரை யாடிடத் தணங்கு 125
நசையுட் கொண்ட நன்மை யியன்று
விழுத்தகைத் தெய்வம் வழுத்தா மரபிற்
றார்ப்பொலி மேனிக் கூர்ப்பணங் கொடுக்கிய
மண்டு தணிதோண் மாசின் மகளிர்
பெண்டுணை சார்வாக் கண்டுழிக் கலங்கிக் 130
கடைக்கண் சிவப்புங் கதிர்முலை யுருப்பும்
மடக்காக் கூழையு மருங்குலும் பற்றிப்
புதையிருந் தன்ன கிளரொளி வனப்பினர்
அரங்கொல் கிண்கிணி யிரங்க வொல்கிப்
பொற்கிடுகு செறிந்து போர்வை முற்றி 135
முத்துக்காழ் தொடர்ந்த சித்திரக் கூடத்துப்
பவழக் கொடுங்காழ் பத்திமுகத் தழுத்தித்
திகழ்கோட் டியன்ற திமிசுகுடப் பொற்கால்
உரிமைச் சுற்றத் துரியோர்க்குத் திறந்த
திருமணி யம்பலத் திமிழ்முழாத் ததும்பும் 140
அரங்க நண்ணி யரிமா சுமந்த
மரகதத் தியன்ற மணிக்காற் கட்டில்
நூல்வினை நுனித்த நுண்டொழி லாளர்
வாலரக் கூட்டிய வானூ னிணவைப்
பால்பரந் தன்ன பஞ்சி மெல்லணைச் 145
சேக்கை மெலியச் செம்மாந் திருந்த
முடிகெழு தந்தை முன்னர்த் தோன்றி
அடிதொழு திறைஞ்சிய வ்வரிடை யெல்லாம்
தெய்வத் தாமரைத் திருமகட் கெடுத்தோர்
ஐயப் படூஉ மணியிற் கேற்ப 150
ஒண்மையு நிறையு மோங்கிய வொளியும்
பெண்மையும் பெருமையும் பிறவு முடைமையிற்
பாசிழை யாயத்துப் பையென நின்ற
வாசவ தத்தை வல்ல ளாகென
ஊழ்முறை பொய்யாது கரும மாதலின் 155
யாழ்முறைக் கரும மிவளதென் றருளி
மற்றவ ணின்ற பொற்றொடி மகளிரைக்
குற்றமில் குறங்கிற்கோ….வல மேற்றிக்
கோதை மார்பிற் காதலி னொடுக்கிப்
பந்துங் கிளியும் பசும்பொற் றூதையும் 160
கந்தியன் மயிலுங் கரந்துறை பூவையும்
கண்ணியுங் கழங்குங் கதிர்முலைக் கச்சும்
வண்ண முற்றிலும் பவழப் பாவையும்
தெளித்தொளி பெறீஇய பளிக்குக்கிளிக் கூடும்
அவரவர் மேயின வவ்வயி னருளி 165
அடிசில் வினையும் யாழின் றுறையும்
கடிமலர்ச் சிப்பமுங் கரந்துறை கணக்கும்
வப்பிகை வரைப்பும் வாக்கின் விகற்பமும்
கற்றவை யெல்லாங் காட்டுமி னெமக்கென
மருளி யாய மருளொடும் போக்கி 170
நங்கை கற்கு மங்கலக் கருவிக்கு
நியம விஞ்சன ம்மைமின் விரைந்தென
ஈன்ற தாயு மென்மகட் கித்தொழில்
மாண்ட தென்று மனத்திற் புகல

பலர் கூற்று[தொகு]

மழலைக் கிண்கிணிக் கழலோன் பெருமகன் 175
அரும்பெறற் றத்தைக் காசா னாகிப்
போக வீணை புணர்க்கப் பெற்ற
தேசிக குமரன் றிருவுடை யன்னென
அடியரு மாயமு நொடிவனர் வியப்ப
ஏனைத் தாயரு மானா தேத்த 180
வத்தவர் பெருமகன் வல்ல வீணை
தத்தை தனக்கே தக்க தாலென
வேட்டது பகருங் கோட்டி யாகிக்
கோட்டமின் முற்றங் குமிழ்குமிழ்த் துரைப்பப்

வாசவதத்தைக்கு அலங்காரம் செய்தல்[தொகு]

பொன்னகர் கொண்ட பூவும் புகையும் 185
அவ்வகற் கொண்ட வவியும் பிரப்பும்
செம்முது செவிலியர் கைபுனைந் தேத்திச்
சந்தன நறுநீர் மண்ணுறுத் தாட்டி
மறுவில் வெண்கோட்டு மங்கலம் பொறித்த
பெருவெண் சீப்பிற் றிருவுற வாரிச் 190
சுருண்முறை வகுத்துச் சூட்டுப் புரியுறீஇக்
கருங்குழல் கட்டிக் கன்னிக் கூழை
பொன்னி னாணிற் புடையெடுத் தியாத்துப்
புதரில் செம்பொன் காயழ லுறுத்த
கதழ்வுறு சின்னஞ் சிதறிய மருங்கிற் 195
றிருநுதற் சுட்டி திகழச் சூட்டி
முத்தக் கலனணி மொய்ப்புச் சேர்த்துப்
பொன்செ யோலையொடு பூங்குழை நீக்கி
மணிச்செய் கடிப்பிணை மட்டஞ் செய்து
தேய்வுற் றமைத்த திருவெள் ளாரத் 200
தேக விடுகொடி யெழிற்றோ ளெழுதிக்
கச்சியாப் புறுத்த கால்வீங் கிளமுலை
முத்த வள்ளியொடு மும்மணி சுடர
மணிக்காற் பா……கவைஇத்
தணிப்பொற் றோரைத் தகையொளி சுடர 205
மட்டங் குயின்ற மங்கல வல்குற்
பட்டுடைத் தானைப் பைம்பூண் சுடரத்
திருமுகை முருக்கின் விரிமலர் கடுப்பச்
செறிமலர் படினுஞ் சீறடி நோமென
நெறியெனப் படுத்த நிலப்பெருந் தவிசின் 210

வாசவதத்தை கீதாசாலைக்குச் செல்லுதல்[தொகு]

உள்ளகத் தொடு…..மெல்லடி
அரிப்பொற் கிண்கிணி யார்ப்ப வரங்கின்
உழைச்சென் மகளி ருக்க மேற்றிச்
சித்திரம் பயின்ற செம்பொ னோலை
முத்துவாய் சூழ்ந்த பத்திக் கோடசைஇச் 215
சிரற்சிற கேய்ப்பச் சிப்பம் விரித்த
கவற்றுவினைப் பவழங் கடைந்துசெய் மணிக்கை
ஆல வட்ட நாலொருங் காடப்
பொன்னிய லாய்வளைக் கன்னிய ரசைப்பப்
பொத்தின் றமைந்தபுனைவிற் றாகிச் 220
சொத்துற் றமைந்த சுதையில் செஞ்சுவர்
வெண்கோட்டு நெடுந்தூண் விதானந் தூக்கித்
தேநவின் றோங்கிய திருநா றொருசிறைக்
கீத சாலை வேதி நிறைய
மல்லற் சுற்றமொடு கல்லெனப் புகுதந் 225
தரக்குப் பீமி யாயமொ டேறிப்
பரப்புமல ரொருசிறைப் பாவையை நிறீஇப்
பண்ணமை நல்லியாழ்ப் பலிக்கடன் வகீஇய

உதயணன் வருகை[தொகு]

அண்ணல் வருகென வவ்வயி னோடி
ஒண்டொடி மகளிர் கொண்டகம் புகுதரத் 230
தானைத் தவிசிற் றகையோ னேற
ஏனைத் தவிசி னங்கையை யிருத்தினர்
இன்னா ளென்ப திவனு மறியான்
…….

வாசவதத்தை யாழ்பயிலத் தொடங்கல்[தொகு]

நன்னகர்க் கிளவி நயவரப் பயிற்றி
ஆசான் கொடுக்கு மரும்பெறல் விச்சை 235
காண்போர் செய்யுங் கடப்பா டிதுவென
வெள்வளை முன்கை தோழியர் பற்றி
ஒள்ளிழை மாத ரொழுக்கஞ் செய்கெனக்
காந்த ளழித்த கைம்முகிழ் கூப்பிக்
கஞ்சிகை திறந்த பொழுதி னன்றுதன் 240
காட்சிக் கொத்த கள்வ னாதலின்
மேற்படு நோக்கமொ டிருவரு மெய்தி
ஏப்பெரு துயரமொ டிலங்கிழை யிறைஞ்சிப்
பொற்காற் படுத்துப் பூந்துகில் வளைஇக்
கைக்கோற் சிலதரொடு கன்னியர் காப்பத் 245
தெய்வத் தன்ன திறலோன் காட்டத்
கைவைத் தனளாற் கனங்குழை யாழென்.

34 யாழ் கைவைத்தது முற்றிற்று.