பெருங்கதை/3 18 தருசகனோடு கூடியது

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

3 18 தருசகனொடு கூடியது

தோழர் செயல்[தொகு]

அரடமை பெருமலை யடைவது பொருளென
முரணமை மன்னர் முடுகிய பின்னர்
ஆளூறு பைக் கோளூறு புரிந்த
செம்ம லாளர் தம்முட் கூடி
ஒன்னா மன்னரை யோட்டின மாதலின் 5
மின்னேர் சாயலை மேயநம் பெருமகற்
காக்க முண்டெனுஞ் சூழ்ச்சியோ டொருபால்
புலர்ந்த காலை மலர்ந்தவ ணணுகிக்
களங்கரை கண்டு துளங்குபு வருவோர்
மகத மன்னற் குகவை யாகக் 10
கோடாச் செங்கோற் குருகுலத் தரசன்
ஓடாக் கழற்கா லுதயண குமரன்
கோயில் வேவினு ளாய்வளைப் பணைத்தோட்
னேவி வீயத் தீரா வவலமொடு
தன்னா டகன்று பன்னாடு படர்ந்து 15
புலம்பிவட் டீர்ந்து போகிய போந்தோன்
சலந்தீர் பெரும்புகழ்ச் சதானிக வரசனும்
மறப்பெருந் தானை மகத மன்னனும்
சிறப்புடைக் கிழமை செய்ததை யறிதலின்
அகப்பாட் டண்மைய னல்லதை யிகப்பத் 20
தாதலர் பைந்தார்த் தருசக னமக்கு
வேறல னவனை வென்றியி னீக்கி
மாறுசெயற் கிருந்த மன்னரை யோட்டியது
பண்ணி கார மாகக் கண்ணுற்று
முற்பாற் கிழமை முதலற வின்றி 25
நற்கியாப் புறீஇப் போது நாமெனச்
சிறந்த தோழர் சிலரொடு சென்று
விரவுமலர்த் தாரோ யிரவெறிந் தகற்றினன்
என்பது கூறென மன்பெருஞ் சீர்த்தி
வயந்தக குமரனை வாயி லாகப் 30

வயந்தகன் செயல்[தொகு]

போக்கிய பின்றையவன் புனைநகர் வீதியுட்
கேட்போர்க் கெல்லாம் வேட்கை யுடைத்தா
மறைத்த லின்றி மறுகுதோ ற்றைய

தருசகன் செயல்[தொகு]

அகன்பெருந் தானை யரசத் தாணியுள்
நிகழ்ந்த திற்றென நெடுந்தகை கேட்டு 35
நன்னாடு நடுக்க முறீஇத் தன்மேல்
ஒன்னா மன்ன ருடன்றுவரு காலை
வணக்கும் வாயில் காணான் மம்மரொடு
நினைப்புள் ளுறுத்த நெஞ்சமொ டிருந்தோற்கு
வென்றி மாற்றஞ் சென்றுசெவிக் கிசைப்பப் 40
பூப்புரி முற்றம் பொலியப் புகுந்து
வாய்ப்பொரு ளாக வறிந்துவந் தோர்களைக்
காட்டுக விரைந்தெனக் காவல னருள
நகரங் காடிதொறும் பகர்வன னறையும்
வாட்டொழிற் றடக்கை வயந்தகற் காட்டி 45
உட்பட் டதனை யொழிவின் றுணர்ந்துநின்
கட்பட் டுணர்த்துதல் கரும மாக
வந்தன னிவனென வெந்திறல் வேந்தன்
பருகு வன்ன பண்பின னாகி
அருகர் மாற்ற மங்கையி னவித்துக் 50
கேட்குஞ் செவ்வி நோக்கம் வேட்ப
இருபெரு மன்ன ரிறைவருந் தம்முள்
ஒருபெருங் கிழமை யுண்மை யுணர்த்தலும்
வயந்தகன் வாயது நிற்க வுயர்ந்த
நண்பே யன்றி நம்மொடு புணர்ந்த 55
கண்போற் கிழமைக் கலப்பு முண்டெனத்
தானை நாப்பட் டானெடுத் துரைத்து
வீணை நவின்ற விறல்வே லுதயணன்
இவண்வரப் பெற்றேன் றவமிக வுடையெனென்
றேத மின்மையு நீதியும் வினாஅய் 60
இன்னா மன்ன ரிகலடு பெரும்படை
தாக்கிய வாறுந் தகர நூறிப்
போக்கிய வாறும் போந்த வண்ணமும்
முறைமையிற் கேட்டு நிறைநீர் வரைப்பில்
கெட்ட காலையுங் கேட்டோ ருவப்ப 65
நட்டோர்க் காற்று நன்ன ராளன்
வரவெதிர் கொள்கென வாயிலும் வீதியும்
விரைமலர்ப் பூங்கொடி வேறுபட வுயரி
வனப்பொடு புணர்ந்த வார்கவுள் வேழம்
சினப்போ ரண்ணற்குச் செல்கெனப் போக்கிக் 70

தருசகன் உதயணனை எதிர்கொள்ளச் செல்லுதல்[தொகு]

குலத்திற் றன்னொடு நிகர்க்குந னாதலிற்
கவற்சியொடு போந்த காவலன் முன்னர்ப்
புகற்சியொடு சேறல் பொருத்த மின்றெனப்
போற்றுங் கவரியுங் குடையுங் கொலமும்
மாற்றுவன னாகி மகதவர் கோமான் 75
இடுமணி யில்லதோர் பிடிமிசை யேறிப்
படுமணி வாயில் பலரொடும் போதா
வானுய ருலகம் வழுக்குபு வீழ்ந்த
தேனுயர் நறுந்தார்த் திறலோன் போலத்
தோழர் சூழ வேழ மேல்கொண் 80
டுதையண குமரன் புகுதர வோடிச்

சிலர் தருசகனைத் தடுத்தல்[தொகு]

சிதைபொரு டெரியுஞ் செந்நெறி யாளர்
கடல்கண் டன்ன வடலருந் தானையை
இணைய கூட்டமொ டெண்ணா தகம்புக்கு
வினைமேம் பட்ட வென்றி வேந்தனைத் 85
தெளிவது தீதெனச் சேர்ந்துசென் றிசைப்ப

தருசகன் உதயணனை எதிர்கொள்ளல்[தொகு]

நட்புவலைக் கிழமையி னம்பொருட் டாக
உட்குறு பெரும்படை யுலைத்த வொருவனை
வேறெனக் கருதுதல் விழுப்ப மன்றெனத்
தேறக் காட்டித் தெளிவு முந்துறீஇச் 90
சென்றுகண் ணுற்ற குன்றா…..
இடத்தொ டொப்புமை நோக்கி யிருவரும்
தடக்கை பிணைஇச் சமயக் காட்சியர்
அன்பிற் கலந்த வின்பக் கட்டுரை
இருவருந் தம்மு ளேற்பவை கூறித் 95
திருவமர் கோயில் சென்றுபுக் கவ்வழி

தருசகன் உதயணனை உபசரித்து இருக்கச் செயதல்[தொகு]

உஞ்சையம் பெரும்பதி யுழக்குபு கொல்லும்
வெஞ்சின வேயத்து வெகுட்சி நீக்கிப்
பல்லுயிர் பருவர லோம்பிய பெருமகன்
மல்லற் றானை வத்தவர் கோமாற் 100
கொன்னா மன்ன ருடல்சின முருக்கி
இன்னா நீக்கலு மேயர் குலத்தோற்
கியைந்துவந் த்துவென வியந்துவிரல் விரித்துப்
பக்க மாக்க டத்தமு ளுரைக்கும்
உறுபுகழ்க் கிளவி சிறிய கேளாத் 105
தானு மவனுந் தானத் திழிந்தோர்
மணிக்கான் மண்டபத் தணித்தக விருந்து
தொன்றுமுதிர் தொடர்பே யன்றியுந் தோன்ற
அன்றைக் கிழமையு மாற்ற வளைஇப்
பள்ளி மாடமொடு கோயிலும் பாற்படுத் 110
தெள்ளி வந்த வின்னா மன்னரைப்
போரடு வருத்தந் தீரப் புகுகெனத்
தாருடை வேந்தன் றான்பின் சென்று
கோயில் புகீஇ வாயிலு ளொழிந்து
விருப்பிற் றீரான் வேண்டுவ வமைத்து 115
வருத்த மோம்பினன் வத்தவற் பெற்றென்.

3 18 தருசகனொடு கூடியது முற்றிற்று.