மாலை மாற்று

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை

பதிகம்: 375, சீகாழி[தொகு]

'திருமாலைமாற்று' எனவும் குறிக்கப்பெறும் சிறப்புடையது இப்பதிகம்.
பண்
கௌசிகம்
'மாலைமாற்று', என்பது ஓர் அற்புதமான யாப்பு வடிவம் ஆகும். இது ஒருசொல்விளையாட்டு! முதலிலிருந்து இறுதிவரை அமைந்த ஒருபாடல் அடியை, இறுதியிலிருந்து திருப்பி அப்படியே எவ்விதமாற்றமும் இல்லாமல் படித்தால் அமையும் பாடலே மாலைமாற்று ஆகும்.

இன்றும் சிறுவர்களுக்குச் சொல்விளையாட்டில் 'குடகு', 'விகடகவி' போன்ற சொற்களை அமைத்துக்கூறுவது போன்றது. இச்சொல்லை முதலில் இருந்து படித்தாலும் இறுதியிலிருந்து படித்தாலும் பொருளோடு அமைந்து விளங்குவதைக் காணலாம். இது ஒருசொல்லுள் அமைவது. பிள்ளையார் ஒருபாடல் முழுவதையும் இப்படி அமைத்துப்பாடியுள்ளார். ஒரு பாடலா? ஒரு பதிகமே, பதினோரு பாடல்களைப் பாடியுள்ளார். அம்மாடி! இது யாரால் முடியும், அந்த ஞானப்பிள்ளையால்தான் முடியும்.

இப்படிப்பட்ட யாப்பு வடிவத்தினைத் தமிழ்மொழியில் முதன்முதலில் கண்டுபிடித்துக் கையாண்டவர் திருஞானசம்பந்தப்பெருமான் ஆவார். தமிழ் யாப்பில் அற்புதமான புரட்சிகள் செய்தவர் அந்த ஞானப்பிள்ளையார்.

பாடல்:1 (யாமாமா)[தொகு]

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
இப்பாடலின் சொற்பிரிப்பு
யாம் ஆமா நீ ஆம் ஆம் மாயாழீ காமா காண் நாகா
காணா காமா காழீயா மாமாயா நீ மா மாயா
இதன்பொருள்
யாம்- ஆன்மாக்கள் ஆகிய யாமே கடவுள் என்று கூறினால்,
ஆமா- அது சரியாகுமா?;
நீ- நீ தான் கடவுள் என்றால் அது,
ஆம்ஆம்- அது சரியாகும் ஆம்;
மாயாழீ- பேரியாழை வாசிப்பவனே, (மாயாழ் என்பது பேரியாழ் ஆகும்)
காமா- யாவரும் விரும்பும் கட்டழகா;
காண்- யாவரும் காணும்படியாக,
நாகா- நாகங்களையே(பாம்புகளை) அணிகலனாகப்பூண்டவனே, நாகா.
காணா-எவரும் காணாதபடி,
காமா- காமனைச் செய்தவனே (அதாவது, எரித்து அழித்தவனே)
காழீயா- சீகாழீப்பதியில் எழுந்தருளியுள்ளவனே,
மாமாயா = பெரிய மாயைகளைச் செய்தலில் வல்லவனே! Source
நீ- நீ,
மா-கருமையாக உள்ள (அறியாமையைச் செய்கின்ற),
மாயா- மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக.

பாடல்:2 (யாகாயாழீ)[தொகு]

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதா ராராயாதா காயாகாழீ யாகாயா

இப்பாடலின் சொற்பிரிப்பு: யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆதாய் ஆயாய் ஆயா தார் ஆர் ஆயா தாக ஆயா காழீயா யா கா

இதன் பொருள்:

யாகா = வேள்விப் பயனாக விளங்குபவனே
யாழீ = யாழ் இசைப்பவனே
காயா = அருளுருவத்திருமேனி எடுப்பவனே
காதா = "காதுதல்" ஆகிய அழித்தல் தொழிலைச் செய்பவனே
யார் ஆர் = எத்தகையவர்களுக்கும்
ஆதாய் ஆயாய் = ஆகின்ற தாய் ஆயினவனே
ஆயா = ஆராய முடியாத
தார் ஆர் ஆயா = ஆத்திப் பூவை மாலையாகக் கொண்டவனே
தாக ஆயா = வெட்கையுற்ற தாருக வனத்து முனி பத்தினியர் கூட்டத்தை உடையவனே
காழீயா = சீர்காழி இறைவனே
யா = (துன்பங்கள்) எவற்றினின்றும்
கா = எம்மைக்காத்தருள்க

பாடல்:3 (தாவாமூவா)[தொகு]

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநா தாநாழீ காசாதாவா மூவாதா

இப்பாடலின் சொற்பிரிப்பு: தாவா மூவா தாசா காழீநாதா நீ யாமா மா மா மா யாநீ தாந ஆழி சா கா காசா தா வா மூ வாதா

இதன் பொருள்:

தாவா = அழியாத
மூவா = முதுமை அடையாத
தாசா =தசகாரியங்கள் என்பவற்றால் அடையும் பொருளாக உள்ளவனே
காழீநாதா = சீர்காழிக்குத் தலைவனே
நீ = அஞ்சி நீங்கத்தகுந்த (சுடுகாட்டில்)
யாமா = யாமம் ஆகிய நள்ளிரவில் நடனம் புரிபவனே
மா = பெருமை மிகுந்தவனே
மா மா = மாண்புமிக்க ஐராவணம் என்னும் யானையின்மேல்
யாநீ = ஏறி வருபவனே
தாந ஆழி = கொடைத்தன்மையில் கடல் போன்றவனே
சா கா = சாதலினின்று காத்தருள்க
காசா = பொன் போன்ற ஒளியை உடையவனே
தா = எல்லா வரங்களும் தருக
வா = எங்கள் முன்னே வருக
மூ = எல்லாவற்றுக்கும் முற்பட்டவனே
வாதா = காற்று முதலிய ஐம்பூதங்களீன் வடிவாக உள்ளவனே

பாடல்:4 (நீவாவாயா)[தொகு]

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ

பாடல்:5 (யாகாலாமே )[தொகு]

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயமே லாகாயா

பாடல்:6 (மேலேபோகா)[தொகு]

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
சேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே

பாடல்:7 (நீயாமாநீ)[தொகு]

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ

பாடல்:8 (நேணவிராவிழ)[தொகு]

நேணவிராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணணே

பாடல்:9 (காலேமேலே)[தொகு]

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா

பாடல்:10 (வேரியுமேணவ)[தொகு]

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே

பாடல்:11 (நேரகழாமித)[தொகு]

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே

பார்க்க[தொகு]

திருஞானசம்பந்தரின் முதற்பதிகம்
திருநீற்றுப்பதிகம்
திருவெழுகூற்றிருக்கை
பஞ்சாக்கரத்திருப்பதிகம்
நமச்சிவாயத்திருப்பதிகம்

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=மாலை_மாற்று&oldid=1512442" இலிருந்து மீள்விக்கப்பட்டது