வரதுங்க பாண்டியன் தனிப்பாடல்
Appearance
இதில்
இவரும் இவர் மனைவியும் பாடிய இரண்டு பாடல்கள் உள்ளன
நூலில் பக்கம் 79 & 80***
குறிப்புரை - செங்கைப் பொதுவன்
- இவை தனிப்பாடல் திரட்டு நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள்
- அஞ்சலென்ற கரதலமுங் கணபணகங் கணமு
- மரைக்கிசைந்த புலியுடையும் அம்புலிச் செஞ்சடையுங்
- கஞ்சமலர்ச் சேவடியும் கனைகழலும் சிலம்புங்
- கருணைபொழி திருமுகமும் கண்களொரு மூன்று
- நஞ்சையுண்ட மணிமிடறு முந்நூலு மார்பும்
- நலந்திகழ் வெண்ணீற் றொளியு மறிமானு மழுவும்
- பஞ்சடிச் சிற்றிடையு மையாளொப்பனை பாகமுமாய்ப்
- பால்வண்ணன் உளத்திருக்கப் பயமுண்டோ வெமக்கே. (1)
அவர் மனைவி
- ஆக்கையெனும் புழுக்குரம்பை யணைந் தணையாப் பொருளை
- யருளொளியைப் பராபரத்துக் கப்புறமாம் அறிவை
- நீக்கமற மயிர் முளைக்கும் இடமற வெங்கெங்கு
- நறைந்து நின்ற முழுமுதலை நினைவிலெழும் சுடரைப்
- பாக்கியங்கள் செய்தனந்தந் தவக்குறை கண்முடிக்கும்
- பழவடியார் தமக்குதவும் பசுந்துணர்க் கற்பகத்தை
- வாக்குமன விகற்பத்தா லளவுபடா வொன்றை
- மாசற்ற வெறுவெளியை மனவெளியில் அடைப்பாம். (2)