உள்ளடக்கத்துக்குச் செல்

1. நாமகள் இலம்பகம்- பாடல் 226-250

விக்கிமூலம் இலிருந்து

(கோணிலை)

[தொகு]
கோணிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி
நீணில மாரி யின்றி விளைவஃகிப் பசியு நீடிப்
பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந் தறங்கண் மாறி
யாணையிவ் வுலகு கேடா மரசுகோல் கோடி னென்றான். (226) ( )

(தார்ப்பொலி)

[தொகு]
தார்ப்பொலி தரும தத்தன் றக்கவா றுரைப்பக் குன்றிற்
கார்த்திகை விளக்கிட் டன்ன கடிகமழ் குவளைப் பைந்தார்
போர்த்ததன் னகலமெல்லாம் பொள்ளென வியர்த்துப் பொங்கி
நீர்க்கடன் மகரப் பேழ்வாய் மதனன்மற் றிதனைச் சொன்னான். (227) ( )

(தோளினால்)

[தொகு]
தோளினால் வலியராகித் தொக்கவர் தலைகள் பாற
வாளினாற் பேச லல்லால் வாயினாற் பேச றேற்றேன்
காளமே கங்கள் சொல்லிக் கருனையாற் குழைக்குங் கைகள்
வாளமர் நீந்தும் போழ்தின் வழுவழுத் தொழியு மென்றான். (228) ( )

(நுண்முத்தமேற்றி)

[தொகு]
நுண்முத்த மேற்றி யாங்கு மெய்யெலாம் வியர்த்து நொய்தின்
வண்முத்த நிரைகொ ணெற்றி வார்முரி புருவ மாக்கிக்
கண்ணெரி தவழ வண்கை மணிநகு கடக மெற்றா
வெண்ணகை வெகுண்டு நக்குக் கட்டியங் காரன் சொன்னான். (229) ( )

(என்னலாற்)

[தொகு]
என்னலாற் பிறர்கள் யாரே யின்னவை பொறுக்கு நீரா
ருன்னலாற் பிறர்கள் யாரே யுற்றவற் குறாத சூழ்வார்
மன்னன்போய்த் துறக்க மாண்டு வானவர்க் கிறைவனாக
பொன்னெலாம் விளைந்து பூமி பொலியயான் காப்ப லென்றான். (230) ( )

(விளைகபொலிக)

[தொகு]
விளைக பொலிக வஃதே யுரைத்திலம் வெகுள வேண்டா
களைக மெழுக மின்னே காவலற் கூற்றங் கொல்லும்
வளைகய மடந்தை கொல்லுந் தான்செய்த பிழைப்புக் கொல்லு
மளவறு நிதியங் கொல்லு மருள்கொல்லு மமைக வென்றான். (231) ( )

(நிலத்தலைத்)

[தொகு]
நிலத்தலைத் திருவ னாட னீப்பருங் காதல் கூர
முலைத்தலைப் போக மூழ்கி முகிழ்நிலா முடிகொள் சென்னி
வெலற்கருந் தானை நீத்த வேந்தனை வெறுமை நோக்கிக்
குலத்தொடுங் கோற லெண்ணிக் கொடியவன் கடிய சூழ்ந்தான். (232) ( )

(கோன்றமர்)

[தொகு]
கோன்றமர் நிகள மூழ்கிக் கோட்டத்துக் குரங்கத் தன்கீ
ழேன்றநன் மாந்தர்க் கெல்லா மிருநிதி முகந்து நல்கி
யூன்றிய நாட்டை யெல்லா மொருகுடை நீழல் செய்து
தோன்றினான் குன்றத் துச்சிச் சுடர்ப்பழி விளக்கிட் டன்றே. (233) ( )


(பருமித்த)

[தொகு]
பருமித்த களிறு மாவும் பரந்திய றேரும் பண்ணித்
திருமிக்க சேனை மூதூர்த் தெருவுதொ றெங்கு மீண்டி
யெரிமொய்த்த வாளும் வில்லு மிலங்கிலை வேலு மேந்திச்
செருமிக்க வேலினான்றன் றிருநகர் வளைந்த தன்றே. (234) ( )

(நீணில)

[தொகு]
நீணில மன்ன போற்றி நெடுமுடிக் குரிசில் போற்றி
பூணனி மார்ப போற்றி புண்ணிய வேந்தே போற்றி
கோணினைக் குறித்து வந்தான் கட்டியங் கார னென்று
சேணிலத் திறைஞ்சிச் சொன்னான் செய்யகோல் வெய்ய சொல்லான். (235) ( )

(திண்ணிலை)

[தொகு]
திண்ணிலைக் கதவ மெல்லாந் திருந்துதா ழுறுக்க வல்லே
பண்ணுக பசும்பொற் றேரும் படுமதக் களிறு மாவுங்
கண்ணகன் புரிசை காக்குங் காவல ரடைக வென்றான்
விண்ணுறு மேறு போன்று வெடிபட முழங்குஞ் சொல்லான். (236) ( )

(புலிப்பொறி)

[தொகு]
புலிப்பொறிப் போர்வை நீக்கிப் பொன்னணிந் திலங்கு கின்ற
வொலிக்கழன் மன்ன ருட்கு முருச்சுடர் வாளை நோக்கிக்
கலிக்கிறை யாய நெஞ்சிற் கட்டியங் கார னம்மேல்
வலித்தது காண்டு மென்று வாளெயி றிலங்க நக்கான். (237) ( )


(நங்கைநீ)

[தொகு]
நங்கைநீ நடக்கல் வேண்டு நன்பொருட் கிரங்க வேண்டா
கங்குனீ யன்று கண்ட கனவெலாம் விளைந்த வென்னக்
கொங்கலர் கோதை மாழ்கிக் குழைமுகம் புடைத்து வீழ்ந்து
செங்கயற் கண்ணி வெய்ய திருமகற் கவலஞ் செய்தாள். (238) ( )

(மல்லலைத்)

[தொகு]
மல்லலைத் தெழுந்து வீங்கி மலைதிரண் டனைய தோளா
னல்லலுற் றழுங்கி வீழ்ந்த வமிர்தமன் னாளை யெய்திப்
புல்லிக்கொண் டவல நீக்கிப் பொம்மல்வெம் முலையி னாட்குச்
சொல்லுவா னிவைகள் சொன்னான் சூழ்கழற் காலி னானே. (239) ( )

(சாதலும்)

[தொகு]
சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தி னாகு
மாதலு மழிவு மெல்லா மவைபொருட் கியல்பு கண்டாய்
நோதலும் பரிவு மெல்லா நுண்ணுணர் வின்மை யன்றே
பேதைநீ பெரிதும் பொல்லாய் பெய்வளைத் தோளி யென்றான். (240) ( )

(தொல்லைநம்)

[தொகு]
தொல்லைநம் பிறவி யெண்ணிற் றொடுகடன் மணலு மாற்றா
வெல்லைய வவற்று ளெல்லா மேநிலம் பிறந்து நீங்கிச்
செல்லுமக் கதிக டம்முட் சேரலஞ் சேர்ந்து நின்ற
வில்லினு ளிரண்டு நாளைச் சுற்றமே யிரங்கல் வேண்டா. (241) ( )

(வண்டுமொய்த்)

[தொகு]
வண்டுமொய்த் தரற்றும் பிண்டி வாமனால் வடித்த நுண்ணூ
லுண்டுவைத் தனைய நீயு முணர்விலா நீரை யாகி
விண்டுகண் ணருவி சோர விம்முயிர்த் தினையை யாத
லொண்டொடி தகுவ தன்றா லொழிகநின் கவலை யென்றான். (242) ( )

(உரிமை)

[தொகு]
உரிமைமுன் போக்கி யல்லா லொளியுடை மன்னர் போகார்
கருமமீ தெனக்கு மூர்தி சமைந்தது கவல வேண்டா
புரிநரம் பிரங்குஞ் சொல்லாய் போவதே பொருண்மற் றென்றா
னெரிமுயங் கிலங்கு வாட்கை யெற்றிளஞ் சிங்க மன்னான். (243) ( )

(என்புநெக்)

[தொகு]
என்புநெக் குருகி யுள்ள மொழுகுபு சோர யாத்த
வன்புமிக் கவலித் தாற்றா வாருயிர்க் கிழத்தி தன்னை
யின்பமிக் குடைய சீர்த்தி யிறைவன தாணை கூறித்
துன்பமில் பறவை யூர்தி சேர்த்தினன் றுணைவி சேர்ந்தாள். (244)
(வேறு)

(நீருடைக்கு)

[தொகு]
நீரு டைக்கு வளையி னெடுங்க ணின்ற வெம்பனி
வாரு டைம்மு லைமுகந் நனைப்ப மாதர் சென்றபின்
சீரு டைக்கு ருசிலுஞ் சிவந்த ழன்றொர் தீத்திரள்
பாரு டைப்ப னிக்கடல் சுடுவ தொத்து லம்பினான். (245) ( )

(முழைமுகத்)

[தொகு]
முழைமுகத் திடியரி வளைத்த வன்ன மள்ளரிற்
குழைமுகப் புரிசையுட் குருசி றான கப்பட
இழைமுகத் தெறிபடை யிலங்கு வாட்க டலிடை
மழைமு கத்த குஞ்சரம் வாரியுள் வளைத்தவே.(246) ( )

(அயிலினிற்)

[தொகு]
அயிலினிற் புனைந்த வாளழன்று ருத்து ரீஇயுடன்
பயில்கதிர்ப் பருமணிப் பன்ம யிர்ச்செய் கேடகம்
வெயிலெனத் திரித்து விண்வழுக் கிவந்து வீழ்ந்ததொர்
கயிலணிக் கதிர்நகைக் கடவு ளொத்து லம்பினான் (247) ( )

(மாரியிற்கடுங்)

[தொகு]
மாரியிற் கடுங்கணை சொரிந்து மள்ள ரார்த்தபின்
வீரியக் குருசிலும் விலக்கி வெங்க ணைமழை
வாரியிற் கடிந்துட னகற்ற மற்ற வன்படை
பேரி யற்பெருங் களிறு பின்னிவந் தடைந்தவே.(248) ( )

(சீற்ற)

[தொகு]
சீற்றமிக்க மன்னவன் சேர்ந்த குஞ்ச ரந்நுதற்
கூற்ற ருங்கு ருதிவாள் கோடுற வழுத்தலி
னூற்றுடை நெடுவரை யுருமு டன்றி டித்தென
மாற்ற ரும்மதக் களிறு மத்தகம் பிளந்தவே. (249) ( )

(வேன்மிடைந்த)

[தொகு]
வேன்மிடைந்த வேலியும் பிளந்து வெங்கண் வீரரை
வான்மயிர்ச் செய்கே டகத்திடித் துவாள் வலையரிந்
தூனு டைக்கு ருதியுள் ளுழக்குபு திரிதரத்
தேன்மி டைந்த தாரினான் செங்களஞ் சிறந்ததே. (250) ( )




பார்க்க

[தொகு]
சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்
1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
1. நாமகள் இலம்பகம்- பாடல் 126-150
1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175
1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200
1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225
1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275
1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300
1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325
1. நாமகள் இலம்பகம்- பாடல் 326-350
1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375
1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-400