1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50

விக்கிமூலம் இலிருந்து

maiyal Yanaiin mumatha mairnthutha

சீவகசிந்தாமணி[தொகு]

1.நாமகள் இலம்பகம்-பாடல் 26-50.[தொகு]

ஆய்பிழி[தொகு]

ஆய்பிழி விருத்துவண் டயி்ற்றி யுண்டுதேன்
வாய்பொழி குவளைகள் சூடி மள்ளர்கள்
தேய்பிறை யிரும்புதம் வலக்கை சேர்த்தினார்
ஆய்செநெ லகன்றகா டரிகுற் றார்களே. (26)


வலியுடைக்[தொகு]

வலியுடைக் கைகளான் மலர்ந்த தாமரை
மெலிவெய்தக் குவளைகள் வாடக் கம்பலம்
பொலிவெய்தப் பூம்பொய்கை சிலம்பிப் பார்ப்பெழ
மலைபட வரிந்துகூன் குயங்கை மாற்றினார். (27)


வாளையினினந்[தொகு]

வாளையி னினந்தலை யிரிய வண்டலர்
தாளுடைத் தாமரை கிழிய வண்சுமை
கோளுடை யிளையவர் குழாங்கொண் டேகலிற்
பாளைவாய் கமுகினம் பழங்கள் சிந்துமே. (28)


சோர்புயன்[தொகு]

சோர்புயன் முகிறலை விலங்கித் தூநில
மார்புகொண் டார்ந்தது நரல வண்சுனை
ஆர்புறு பலாப்பழ மழிந்த நீள்களம்
போர்பினான் மலிந்துடன் பொலிந்த நீரவே. (29)


ஈடுசால்போர்[தொகு]

ஈடுசால் போர்பழித் தெருமைப் போத்தினால்
மாடுறத் தெழித்துவை களைந்து காலுறீஇச்
சேடுறக் கூப்பிய செந்நெற் குப்பைகள்
கோடுயர் கொழும்பொனின் குன்ற மொத்தவே. (30)


சுரும்புகண்[தொகு]

சுரும்புகண் ணுடைப்பவ ராலை தோறெலாம்
விரும்பிவந் தடைந்தவர் பருகி விஞ்சிய
திருந்துசா றடுவுழிப் பிறந்த தீம்புகை
பரந்துவிண் புகுதலிற் பருதி சேந்ததே. (31)

கிணைநிலைப்[தொகு]

கிணைநிலைப் பொருநர்தஞ் செல்லல் கீழ்ப்படப்
பணைநிலை யாய்செநெற் பகரும் பண்டியும்
கணைநிலைக் கரும்பினிற் கவரும் பண்டியும்
மணநிலை மலர்பெய்து மறுகும் பண்டியும் (32)


மல்லலந்[தொகு]

மல்லலந் தெங்கிள நீர்பெய் பண்டியும்
மெல்லிலைப் பண்டியுங் கமுகின் மேதகு
பல்பழுக் காய்க்குலை பெய்த பண்டியும்
ஒல்குதீம் பண்டம்பெய் தொழுகும் பண்டியும் (33)


கருங்கடல்[தொகு]

கருங்கடல் வளந்தரக் கரையும் பண்டியும்
நெருங்குபு முதிரையி னிறைந்த பண்டியும்
பெருங்கலிப் பண்டிகள் பிறவுஞ் செற்றுபு
திருந்தியெத் திசைகளுஞ் செறிந்த வென்பவே. (34)

கிளிவளர்[தொகு]

கிளிவளர் பூமரு தணிந்து கேடிலா
வளவயல் வைகலு மின்ன தென்பதேன்
துளியொடு மதுத்துளி யறாத சோலைசூழ்
ஒளியமை யிருக்கையூ ருரைக்க நின்றவே. (35)


(வேறு)[தொகு]

சேவலன்ன[தொகு]

சேவலன்னந் தாமரையின் றோடவிழ்ந்த செவ்விப்பூக்
காவிற்கூ டெடுக்கிய கவ்விக்கொண் டிருந்தன
தாவில்பொன் விளக்கமாத் தண்குயின் முழவமாத்
தூவிமஞ்ஞை நன்மணம் புகுத்துந் தும்பிக்கொம்பரோ. (36)

கூடினார்கணம்[தொகு]

கூடினார் கணம்மலர்க் குவளையங் குழியிடை
வாடுவள்ளை மேலெலாம் வாளையேறப் பாய்வன
பாடுசால் கயிற்றிற் பாய்ந்துபல்கல னொலிப்பப் போந்து
தாடுகூத்தி யாடல்போன்ற நாரை காண்ப வொத்தவே. (37)


காவியன்ன[தொகு]

காவியன்ன கண்ணினார் கயந்தலைக் குடைதலின்
ஆவியன்ன பூந்துகிலணிந்த வல்குற் பல்கலை
கோவையற் றுதிர்ந்தன கொள்ளுநீர ரின்மையின்
வாவியாவும் பொன்னணிந்து வானம்பூத்த தொத்தவே. (38)


பாசவல்லிடிப்[தொகு]

பாசவல்லிடிப் பவருலக்கை வாழைப் பல்பழம்
ஆசினி வருக்கை மாதடிந்து தேங்கனியுதிர்த்
தூசலாடு பைங்கமுகு தெங்கினொண் பழம்பரீஇ
வாசத்தாழை சண்பகத்தின் வான்மலர் கணக்குமே. (39)


மன்றனாறி[தொகு]

மன்றனாறிலஞ்சி மேய்ந்துமா முலைசுரந்தபால்
நின்றதாரையா னிலநனைப்ப வேகி நீண்மனைக்
கன்றருத்தி மங்கையர் கலந்நிறை பொழிதர
நின்ற மேதியாற் பொலிந்த நீரமாட மாலையே. (40)


வெள்ளிப்போழ்[தொகு]

வெள்ளிப்போழ் விலங்கவைத் தனையவாய் மணித்தலைக்
கொள்பவளங் கோத்தனைய காலகுன்றிச் செங்கண
ஒள்ளகிற் புகைதிரண்ட தொக்குமா மணிப்புறாக்
கிள்ளையொடு பாலுணுங் கேடில்பூவை பாடவே. (41)


காடியுண்ட[தொகு]

காடியுண்ட பூந்துகில் கழுமவூட்டும் பூம்புகை
மாடமாலை மேனலார் மணிக்குழலின் மூழ்கலிற்
கோடுயர்ந்த குன்றின்மேற் குழீஇய மஞ்ஞைதஞ்சிற
காடுமஞ்சினுள் விரித்திருந்த வண்ண மன்னரே. (42)


கண்ணுளார்[தொகு]

கண்ணுளார் நுங்காதல ரொழிககாம மீங்கென
உண்ணிலாய வேட்கையா லூடினாரை யாடவர்
வண்ண மேகலைகளைப் பற்றவற் றுதிர்ந்தன
எண்ணில் பொன்சுடு நெருப்புக்க முற்றமொத்தவே. (43)

கோட்டினத்தகர்[தொகு]

கோட்டினத் தகர்களுங் கொய்ம்மலர தோன்றிபோற்
சூட்டுடைய சேவலுந் தோணிக்கோழி யாதியா
வேட்டவற்றி னூறுளார் வெருளிமாந்தர் போர்க்கொளீஇக்
காட்டியார்க்குங் கௌவையுங்கடியுங் கௌவைகௌவையே. (44)


இறுநுசுப்பினந்[தொகு]

இறுநுசுப்பி னந்நலா ரேந்துவள்ளத் தேந்திய
நறவங் கொப்புளித்தலி னாகுபுன்னை பூத்தன
சிறகர்வண்டு செவ்வழி பாடமாடத் தூடெலாம்
இறைகொள் வானின்மீனென வரம்பைமுலை யினிருந்தவே. (45)


விலக்கில்சாலை[தொகு]

விலக்கில் சாலையாவர்க் கும்வெப்பின் முப்பழச்சுனைத்
தலைத்தணீர் மலரணிந்து சந்தனஞ் செய்பந்தரும்
கொலைத்தலைய வேற்கணார் கூத்துமன்றி யைம்பொறி
நிலத்தலைய துப்பெலா நிறைதுளும்பு மூர்களே. (46)


அடிசில்வைகலா[தொகு]

அடிசில்வைக லாயிர மறப்புறமு மாயிரம்
கொடியனார் செய்கோலமும் வைகறோறு மாயிரம்
மடிவில்கம் மியர்களோடு மங்கலமு மாயிரம்
ஒடிவிலை வெறாயிர மோம்புவாரி னோம்பவே. (47)


நற்றவஞ்செய்[தொகு]

நற்றவஞ்செய் வார்க்கிடந் தவஞ்செய்வார்க் குமஃதிடம்
நற்பொருள் செய்வார்க்கிடம் பொருள்செய்வார்க் குமஃதிடம்
வெற்றவின்பம் விழைவிப்பான் விண்ணுவந்து வீழ்ந்தென
மற்றநாடு வட்டமாக வைகுமற்ற நாடரோ. (48)


நகர் வளம்[தொகு]

(வேறு)[தொகு]

கண்வலைக்[தொகு]

கண்வலைக் காமுக ரென்னு மாபடுத்
தொண்ணிதித் தசைதழீஇ யுடலம் விட்டிடும்
பெண்வலைப் படாதவர் பீடி னோங்கிய
அண்ணலங் கடிநக ரமைதி செப்புவாம். (49)


விண்புகு[தொகு]

விண்புகு வியன்சினை மெலியப் பூத்தன
சண்பகத் தணிமலர் குடைந்து தாதுக
வண்சிறைக் குயிலொடு மயில்கண் மாறுகூய்க்
கண்சிறைப் படுநிழற் காவு சூழ்ந்தவே. (50)




பார்க்க[தொகு]

சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்
1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100
1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150
2. கோவிந்தையார் இலம்பகம்
3. காந்தருவதத்தையார் இலம்பகம்
4. குணமாலையார் இலம்பகம்
5. பதுமையார் இலம்பகம்
6. கேமசரியார் இலம்பகம்
7. கனகமாலையார் இலம்பகம்
8. விமலையார் இலம்பகம்
9. சுரமஞ்சரியார் இலம்பகம்
10. மண்மகள் இலம்பகம்
11. பூமகள் இலம்பகம்
12. இலக்கணையார் இலம்பகம்
13. முத்தியிலம்பகம்.