பயனர்:Sengai Podhuvan

விக்கிமூலம் இலிருந்து
  • Sengai Podhuvan
Chennai, India
Mother tongue – Tamil
Date of birth – July 15, 1936
Education – Vidvan in oriental language Tamil, M.A., M.Ed., Ph.D.
Occupation – Country farmer with single plough, Teacher in Government schools, Lecturer in Banaras Hindu University, Editor in Government Research Project, Editor in a Government Journal,

தொடர்பு ; 91-44-22670203 & 91-99406 41510 podhuvan@gmail.com.

வாழ்விடம் ; தமிழ்நாடு

பொதுவன் அடிகள் ஆகிய செங்கைப் பொதுவன் இளமைக் காலத்தில் ஓரேர் உழவர்.
விக்கிப்பீடியாவில் பங்கு:

உள்ளூர்ப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரையில் மட்டுமே படிக்க முடிந்த இவர் குடும்பச் சூழலால் உழவுத் தொழிலில் ஈடுபட்டு வயிறுவளர்க்க வேண்டியதாயிற்று.
திருச்சி மாவட்டம் பச்சைமலை, பவளமலைப் பகுதியிலுள்ள செங்காட்டுப்பட்டி இவரது ஊர்.
1936 சூலை 15 இவரது பிறந்த நாள்.
தந்தை பெயர் - பொன்னுசாமி
தாயார் பெயர் - செல்லம்மாள்
மனைவி - செங்கைச் செல்வி
மக்கள் - 1 தமிழ்முல்லை, 2 தமிழ்ச்செல்லம், 3 இன்னிலா, 4 வெண்ணிலா, 5 தண்ணிலா, 6 அன்பன்
பேரன் பேத்திகள் - 10 பேர்
கொள்ளுப்பேரக் குழந்தைகள் - 6
திருச்சியில் தொடக்கநிலை ஆசிரியர் பயிற்சியினைப் பெற்றார். தொடக்க, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தப் பணிகளினூடே தானே முனைந்து படித்து S.S.L.C., B.A., M.A. பட்டங்களையும், வித்துவான் பட்டயத்தையும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பெற்றார். புதுக்கோட்டை அரசு கல்லூரியில் 4 மாதம் பயின்று B.T. பட்டமும், சென்னை சைதாப்பேட்டை அரசு கல்லூரி மாலை வகுப்பில் பயின்று M. Ed. பட்டமும் பெற்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் இவருக்கு 'முனைவர்' பட்டம் வழங்கியுள்ளது. 'காலப்பாதையில் தமிழக நாட்டுப்புற விளையாட்டுகள்' என்பது அவர் அப்பலகலைக் கழகத்திற்கு அளித்த ஆய்வுப்பொருள். அப்போது இவரது வழிகாட்டி தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றிவந்த முனைவர் சி. பாலசுப்பிரமணியனார்.
டாக்டர் மு. வரதராசனார் இவரை ஆற்றுப்படுத்தி மேல்நிலைக்குக் கொண்டுவந்தார். தமிழ்நாடு அரசு வல்லுநர் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாட்டு வரலாற்றைத் தொகுத்துக்கொண்டிருந்த பணியில் பதிப்பாசிரியராகப் பணியாற்றும் பெறுப்பினை டாக்டர் மு. வ. அவர்கள் உருவாக்கித் தந்தார்கள். உரைவேந்தர் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை, டாக்டர் கே. கே. பிள்ளை ஆகியோர் தலைமையிலும் இவரது இப்பணி தொடர்ந்தது. கல்வெட்டியல் டாக்டர் ஒய். சுப்பராயலு ஆய்வுப்பணியில் இவருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 'தமிழர் விளையாட்டு மடல்' என்னும் பெயரில் அரசு மாதஇதழ் ஒன்றை வெளியிட்டுவந்தது. அதன் ஆசிரியராகவும் இவர் பணியாற்றிவந்தார்.
காசி இந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகச் சிறிது காலம் பணியாற்றியுள்ளார்.

அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் இவர் பல வரலாற்று நூல்களையும், சிற்றிலக்கிய மரபுக்கவிதை நூல்களையும், சங்கநூல் பத்துப்பாட்டு முழுமைக்கும் ஆய்வுநோக்குச் செயதியுரை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூலகளுக்குப் பல முன்னணித் தமிழறிஞர்கள் மதிப்புரை வழங்கிப் பாராட்டியுள்ளனர்.
இப்போது இவர் தம் கருத்துகளை இணையதளத்தில் உலகுக்குப் படைத்துக்கொண்டிருக்கிறார்.

இவரது அறிவியல் கட்டுரைகள் முன்னணி அறிவியல் இதழ்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Sengai_Podhuvan&oldid=1516657" இலிருந்து மீள்விக்கப்பட்டது