பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2.0 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் சட்டப் பள்ளிகள், சட்ட அலுவலகங்கள், சட்டச் சங்கங்கள், நீதிமன்றங்கள்.அரசாங்க அலுவலகங்கள், சட்ட மன்றங்கள் ஆகியவைகளில் சட்ட நூலகங்கள் நிறுவப்பட் டுள்ளன. அமெரிக்காவில் சட்டத் தொழிலுக்கு உதவி புரியமட்டும் 1000 முதல் 1500 சட்ட நூலகங்கள் இயங்கி வருகின்றன. சட்டச் சிக்கல்கள் தொடர்பாக நாளுக்கு நாள் புதிய புதிய தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கி வரு கின்றன. அரசாங்கம் புதுப் புதுச் சட்டங்களைக் கொண்டு வருகிறது. சமூக மாறுதல்களின் காரணமாக பல விதமான சட்டச் சிக்கல்களும் எழுந்தவண்ணமிருக்கின் றன. இவற்றையெல்லாம் சட்ட நிபுணர்களும், வழக் குரைஞர்களும், நீதிபதிகளும் உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்குச் சட்ட நூலகங்களே உறுதுணேயாயிருக்கின்றன. வேறு எந்தத் தொழிலையும் விட, நூல்களே வெகுவாக நம்பியிருக்கும் தொழில் சட்டத் தொழில்தான் என்று சொல்லலாம். சட்டம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சட்ட நிபுணர்களுக்கு அவ்வப் போது கிடைக்க வேண்டும். பல சட்ட நூலகங்கள் ஒரே கட்டிடத்தில் அமைந்திருப்பதைப் பார்க்கும்பொழுது, செய்த வேலையினைத் திரும்பச் செய்யும் பயனற்ற நிலையங் கள் அவை என்று எண்ணத் தோன்றும். ஆனல், ஆராய்ச் சித் தேவைகளின் அவசரத்தையும் அவசியத்தையும் உண ரும்பொழுது அவற்றின் இன்றியமையாமை தெளிவாகும். அமெரிக்காவிலேயே மிகப் பெரிய சட்ட நூலகங்களில் ஒன்று, காங்கிரஸ் நூலகத்திலிருக்கிறது ஒவ்வொரு மாகாணத் தலைநகரிலும் சட்ட நூலகம் இயங்கி வருகிறது. சமயப் பிரச்சாரகர்கள், பாதிரிமார்கள் முதலியவர் களுக்குப் பயிற்சியளிப்பதற்காக உள்ள சமய நிறுவனங்கள் பலவற்றில் சமய நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. தத்து வம், சமயம், கடவுட் கோட்பாடுகள பற்றிய ஏராளமான நூல்கள் இந்நூலகங்களில் இடம் பெற்றுள்ளன. சில நூல நூலகங்களில், அவை எந்தச் சமயச் சார்புடையவையாக