பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 143

கொண்டு பூனையைக் குத்திப் பிடிப்பதிலே வல்லவனான நூவன் பெரிய வெருகுப் பூனையைப் போலே மெல்ல மெல்லப் பதுங்கிப் பதுங்கி வந்து கொண்டிருந்தான்.

கொச்சகக் கலிப்பா ஆனைகுத்திச் சாய்த்ததிற லாளர்திருக் குற்றாலர் கூனிகொத்தி முக்கிவிக்கிக் கொக்கிருக்கும் பண்ணை எல்லாம் சேனைபெற்ற வாட்காரச் சிங்கனுக்குக் கண்ணிகொண்டு பூனைகுத்தி நூவன்முழுப் பூனைபோல் வந்தானே.

(கூனி - இறால் மீன். சேனை பெறுதல் - தலைமை பெறுதல், முழுப்பூனை - பெரிய காட்டுப்பூனை, வெருகுப் பூனை.)

16. கண்ணிகுத்தும் வகை அடே குளுவா! கலப்பாக இருக்கும் கண்ணிகளை நெருக்கிக் கீழே குத்தி வைத்தோமானால் காக்கைகளும் கூட அகப்பட்டுக் கொள்ளும். மேல் நோக்கியிருக்கும் கண்ணி களைக் கவிழ்த்துத் தரையிலே குத்தினோமானால் வக்காவும் அதிலே அகப்பட்டுக் கொள்ளும். உலைந்து போயிருக்கும் கண்ணியை இருக்கிக் குத்தினோமானால் உள்ளானும் சிக்கிக்கொள்ளும். குலைந்த கண்ணிய்ை முதலிலே திருத்திக்கொண்டு இக் குற்றாலமலைமேல் குத்தடா குளுவா! இராகம் - காம்போதி தாளம் -சாப்பு கண்ணிகள் கலந்த கண்ணியை நெருக்கிக் குத்தினால்

காக்கையும்ப டுமே - குளுவா காக்கையும் படுமே 1 மலர்ந்த கண்ணியைக் கவிழ்த்துக் குத்தினால்

வக்காவும் படுமே - குளுவா வக்காவும் படுமே 2 உலைந்த கண்ணியை இறுக்கிக் குத்தினால்

உள்ளானும் படுமே - குளுவா உள்ளானும் படுமே. 3