பக்கம்:இரு விலங்கு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டையம் புண்டரிகம்

69

தண்டையம் புண்டரீகம் (33

மொண்டார். பின்பு ஆனந்தத்தை உண்டார். இதனச் சேக்கிழார் பெருமான் சொல்கிருர், .

'ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம்,ஒரு மூன்றும் - திருந்துசாத் துவிகமே ஆக

இந்துவாழ் சடையான் ஆடும்.ஆனந்த

எல்லேயில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேர்இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்."

மாறிலாத மகிழ்ச்சியில், பேரின்ப அநுபவ வெள்ளத்தில், இகளத்து இன்புற்ற சுந்தரருக்கு இந்திரியங்களே அடக்கிய சமாதி நிலையில் எத்தகைய இன்பம் உண்டாகுமோ அத் தகைய இன்பம் உண்டாயிற்று. இது வருவதற்குத் தொடக்கமாக இருந்தது காட்சி)

காது கேளாமல் இருந்தால் செவிடு என்று சொல்கி ருேம். அவனேக் காதில்லாதவன் என்றும் சொல்லுவ துண்டு. தோலினல் அமைந்த காது இருந்தாலும் கேட் கின்ற தன்மை இல்லாவிட்டால் காது இல்லாதவன் என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. காதென்னும் உறுப்பு இருந்தாலும் கேளாத நிலை இரண்டு விதத்தில் வரும். இயற்கையாகச் செவிடாக இருப்பவனுக்குக் காது கேட்பது இல்லே. சில சமயங்களில் நாம் எங்காவது

பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தால் பிறர் சொல்வது காதில் விழுகிறது இல்லே துங்கும் பொழுதும் காது கேட்கிறது இல்லை. இயல்பாகக் காது கேட்கும் உணர்வு போக, ஒருவகைச் செவிட்டுநில வந்துவிடுகிறது: ஒன்றிலே மனம் லயித்துவிட்டபோது காது கேளாத நில் இருப்பதைப் பார்க்கிருேம். புத்தகத்தை ஒருவன் படித்துக் கொண்டிருக்கிருன் பக்கத் தி லி ரு ந் து யாரேனும் ஒருவன் மெல்லக் கூப்பிட்டால் அவன் காதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/91&oldid=1402484" இலிருந்து மீள்விக்கப்பட்டது