பக்கம்:இரு விலங்கு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இரு விலங்கு

-

ஆனல் அவனுடைய திருவடி நாம் கானும் வகையில் நிலத்தில் நடப்பது நரம் இருக்கும் பூமியில் படர்ந்து நலம் செய்வது. ஆதலின் நாம் அவனோடு தொடர்பு உடையவர் ஆகவேண்டுமானல் அவன் திருவடியைப் பற்றிக்கொள்ள வேண்டும். மெல்ல நடந்து பழகுகிற குழந்தை தாய் நடக்கும்போது அவள் முழங்காலேக் கட்டிக் கொள்கிறது. அந்தக் குழந்தை தாயின் முழங் காலுக்குத்தான் வரும். ஆகையால்தான் முழங்காலப் பற்றிக்கொள்கிறது. நாமோ ஆண்டவனுடைய திருவடி அளவிற்குக் கூட வரமாட்டோம் அவன் உருவத்தை எப்படி முற்றும் பற்றிக்கொள்ள இயலும்? -

இறைவன் திருவடி எல்லாத் தத்துவங்களுக்கும் அடிப் படையானது எம்பெருமான் திருவுருவத்துடன் எழுந்தருளும்போது பல வகை உறுப்புக்களுடன் வரு கிருன் அந்தத் திருவுருவத்தில் திருவடியை நாம் காண வேண்டுமென்று அதனை வெளிப்படையாகக் காட்டி அலங்காரம் செய்வார்கள், மறைக்கிற வழக்கம் இல்லை. நடராசப் பெருமான் தன்னுடைய திருவடிகளுள் ஒன்றை மேலே தூக்கிக் காட்டுகிருன். அதைக் குஞ்சித பாதம் என்பார்கள் அதனேயே முத்தி என்று சொல்வது. வழக்கம். எல்லோரும் காண எடுத்துக் காட்டிய திருவடி அது; எல்லோருக்கும் லட்சியப் பொருளாக நிலவுகிறது அது.

தொண்டர் காணும் முறை

அருணகிரியார் முருகப் பெ ரு மா னு ைடய திருவடித் தொடர்பை இரந்து வேண்டுகிரு.ர். அந்தத் திருவடி ஞானசொரூபமாக இருக்கிறது என்று சொல் கிருர், அது தத்துவத்தில் ஞானமாகவும், உருவத்தில் தண்டையம் புண்டரிகமாகவும், பயனில் தொண்டர் கண்டு அண்டி மொண்டு ஆழ்ந்து விடுவதாகவும் விளங்கு கிறது, ஞானம் பெற்று இறைவன் அடையவேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/88&oldid=1283942" இலிருந்து மீள்விக்கப்பட்டது