பக்கம்:இரு விலங்கு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இரு விலங்கு


தார்கள். அவர்களுக்கு வரையறையான ஒழுக்கம் இல்ல். தங்களுக்குக் கிடைத்த பொருளேக்கொண்டு இந்த வாழ் வில் பெறுவதற்கரியது காம இன்பம் ஒன்றுதான் என்று எண்ணி அதில் ஈடுபட்டிருந்தார்கள். அதனல் எங்கே பார்த்தாலும் கா. ம. க் கேளிக்கைகளும், அவற்றைப் பாராட்டும் முயற்சிகளுமே நிறைந்திருந்தன. அந்தக் காலத்தில் பல வகையான பிரபந்தங்கள் காமத்தை உண் டாக்கும் முறையில் எழுந்தன. சிற்றரசர்கள் அப்படி வாழ்ந்ததனால் செல்வர்களும் அப்படியே வாழ்ந்தார்கள். ஒரு செல்வன் ஒரு மனேவியைத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதே முறை அப்படியின்றிப் பல மனேவி களையும். பல காமக்கிழத்திகளையும் ஒவ்வொரு செல் வனும் பெற்றிருந்தான். அத்தகையவர்களேயே பெரிய செல்வர்களாக மதிக்கும் அவல நில அப்போது

இருந்தது. r

இவற்றை எல்லாம் கண்ட அருணகிரியாருக்கு, உலகில் இந்தக் காம நோயாகிய தி இப்படிப் யிருக்கிறதே, இந்த நோயைப் போக்கவேண்டுமே என்ற கவலை உண்டாயிற் று. அதனுல் ஆடுத்தடுத்துப் பல வகைகளில் அந்த நோயைப் பற்றிப் பாடலாஞர்: பிறரைப் பற்றிச் சொல்லப்போனுல் அவர்களுக்குக் கோபம் வரும் என்று ஏ ன் னி க் குற்றத்தைத் திம் மேலேயே ஏற்றுக் கொண்டு பாடினர். இது அவ்ருடைய கருணைக்கு அடையாளம் என்பதிைப் பலமுறை நாம் .

வேட்டல்

இப்போது ஒரு புதிய முறையில் காமுகனுடைய நிலையைப் பாடுகிருர் தம்முடைய நெஞ்சைப் பார்த்து அறிவுறுத்தும் முறையில் இந்தப் பாட்டு அமைந்திருக் கிறது. நெஞ்சே, இன்னதை விரும்பவேண்டும்; இன் னதை விரும்பக்கூடாது என்பதைத் தெரிந்துகொள்ளா மல் துன்பத்திற்குக் காரணமான பொருள்களே விரும்பு திருயே! என்ற முறையில் பாட்டு வருகிறது. o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/126&oldid=1283959" இலிருந்து மீள்விக்கப்பட்டது