பக்கம்:இரு விலங்கு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இரு விலங்கு


சென்ருல் அதன் பயணுக நன்மையே விளயும் ஐம்பொறி களுக்குரிய நுகர்ச்சியைத் தரும் பொருளிடத்தில் ஆசை உண்டாகிறது. அதை நுகர்ந்தால் அந்த அளவில் ஆசை நிறைவேருமல் மீட்டும் மீட்டும் வளர்ந்துவருகிறது; அதனல்தான் உலகில் மயலில் ஈடுபட்டவர்களுக்கு எந்தக் காலத்திலும் மன நிறைவு உண்டாவதில்லை. இறை வனுடைய திருவருளேப் பெற்ற பிறகுதான் மன நிறைவு ஏற்படும். .

ஆசையும் மன நிறைவும்

ஐம்பொறிகளும் துாராக்குழிகளாக இருக்கின்றன. உணவை வயிருர உண்பவனுக்கு அப்போதைக்கு உண வில் ஆசை இல்லாமல் இருக்குமேயொழிய, அடுத்த வேளே மீட்டும் அந்த ஆசை எழும் கண்ணுல் பார்க்கும் காட்சியும், காதால் கேட்கும் ஒலியும், மூக்கால் மோந்து பார்க்கும் மணமும் போதும் என்ற அளவில் என்றைக்கும் நமக்குக் கிடைப்பது இல்லே. உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களையும் நுகர்ந்தாலும் அமர லோகத்திலுன்ள பொருள்களே நுகர வேண்டும் என்ற ஏக்கம் உண்டா கிறது. நூறு ஆண்டுகள் ஒருவன் வாழ்ந்து ஐம்பொறி களின் முலம் இன்பங்களைப் பெற்ருலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் நமக்குக் கிடைக்கவில்லேயே என்ற அவாத் தோன்றுகிறது. மன நிறைவு இல்லாதபோது எத்தனை இன்பம் கிடைத்தாலும் மேன்மேலும் ஆசை எழுமேயன்றி அடங்காது. யாருக்கு மன நிறைவு உண் டாகிறதோ அவன்தான் இறைவனேக் காணமுடியும். அப் படிச் சொல்வதைக் காட்டிலும் இறைவனுடைய திரு வருளுக்காக ஆசைப்படுகிறவனுக்கு அந்த அருளிலே தான் நிறைவு உண்டாகும் என்று சொல்ல வேண்டும். இறைவனிடத்தில் ஆசைப்படுகிற காமம் சிவகாமம். அது பக்தி முறுகிய நிக்ல. மற்றப் பொருள்களிடத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/128&oldid=1283960" இலிருந்து மீள்விக்கப்பட்டது