பக்கம்:இரு விலங்கு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வேட்கை

105

நல்ல வேட்கை f05

தெள்ளிய ஏனலிற்கிள்ளயைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன் தாள்வேட் டிலைசிறு

வள்ளைதள்ளித் துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச்

சொல்லைநல்ல வெள்ளிய நித்தில வித்தார மூரலை

வேட்டநெஞ்சே வேட்டல் என்ருல் விரும்புதல் என்று பொருள். நாம் மனேவியை விரும்பிக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் கல்யாணத்திற்கு வேள்வி என்று ஒரு பெயர் உண்டு. வேட்டல் என்பதற்கே திருமணம் செய்தல் என்று பொருள். மனேவியைத் திருமணம் செய்துகொண்ட இடத்தை வே ட் ட க ம் என்று சொல்கிற மரபு ஒன்று தமிழ்நாட்டில் உண்டு. அப்படியே விரும்பிச் செய்கின்ற காரியம் வேள்வி. முனியுங்கவர்கள் செய்கிற செயல் அது. நம்முடைய வாழ்நாளில் நலம் தருவதாகவும். மறுமைக்கு உறு தி தருவதாகவும் இருக்கும் செயல்களேயே வேட்கவேண்டும். அல்லாத வற்றை வேட்டால் அவற்ருல் துன்பமே உண்டாகும்,

அருணகிரியார் தம்முடைய நெஞ்சைப் பார்த்து இரங்குவதுபோலச் சொல்கிருர்; நெஞ்சமே, நீ என்த வேட்கவேண்டுமோ அதை வேட்கவில்லையே! ஒன்றையும் வேட்காமல் சும்மா இருந்தாலும் போதுமே! அப்படி யின்றி எதை வேட்டால் உனக்கு உய்வு கிடைக்காதோ அதை வேட்கிருயே!' என்று சொல்கிரு.ர். மனத்திற்கு ஆசைப்படுவது இயல்பு. ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றி அதனைத் தன்னுடையது ஆக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை மனிதனது உள்ளத்தில் நிகழும் இந்த ஆசைதான் பிறப்புக்கு மூல காரணம் என்று பெரியவர்கள் சொல் கிறர்கள். ஆல்ை இந்த ஆசை நல்ல பொருள்களிடத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/127&oldid=1402677" இலிருந்து மீள்விக்கப்பட்டது