பக்கம்:இரு விலங்கு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வேட்கை

121

 இந்த நாடகத்தில் திருட்டுப்போன பொருள் இன்ன இடத்தில் இருக்கிறதென்று கண்டு சொன்ன ஒற்றரைப் போல நாரதர் இருந்தார். முருகனுக்கு அது தெரியாதா? ஆல்ை நாடகத்தை ஒழுங்காக நடத்தவேண்டும் அல்லவா? நாரத முனிவர் வள்ளியம் பெருமாட்டியின் பேரெழிலே வருணிக்க, அதனல் மிக்க காதல் உடையவன் போல வியாகுல மனத்தோடு வேட உருவம் தரித்து வள்ளி மலேயை நாடிச் சென்ருன். அவன் சென்றது, தனக்குரிய பொருள் இன்ன இடத்தில் இருக்கிறதென்று துப்புத் துலங்காமல் வாடி நின்ற ஒருவன். அது இருக்கிற இடம் தெரிந்த பிறகு எப்படியாவது அதை அடையவேண்டுமே என்ற கவலேயோடு சென்றது போல இருந்தது.

வள்ளியை வேட்டவன்

தினப்புனம் காக்கும் வள்ளியிடம் சென்று பலவகை யான ம்ாயங்களேச் செய்து அவள் உள்ளத்தைச் சோதனை செய்தான். அவளுடைய உறவை மீட்டும் இணைத்துக் கொள்ள விரும்பின்ை வேட்பவகை நின்ருன் தன்னை அவள் வேட்பது முறையாக இருக்க, அவளைத் தான் வேட்டான். அது அவனுடைய பெருங் கருக்ணயைக் காட்டுகிறது, - -

தெள்ளிய ஏனலில் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன்

என்று முருகனைச் சொல்கிரு.ர். வேட்டவன் என்பது திருமணம் புரிந்து கொண்டவன் என்ற பொருளே உடையது.

"மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன்"

என்று வேறு ஓரிடத்தில் சொன்னர். தானே அவளே ஆட்கொள்ள வேண்டுமென்று விரும்பி வந்தவன் ஆகை யால், வேட்டவுன் என்று சொன்னுர், ஈகை மனிதனுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/143&oldid=1402686" இலிருந்து மீள்விக்கப்பட்டது