பக்கம்:இரு விலங்கு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டையம் புண்டரிகம்

81


சுகமாக இருக்கிருர்கள். இன்று பெற்று நிற்கிற அமைதி தான் உண்மையான அமைதி. அச்சத்தினல் உண்டான வேகம் அடங்கி அன்பில்ை உண்டான அமைதியில் அவர் கள் வாழ்கிருர்கள். இப்போது அவர்களுக்கு உண்மை புலகிையிருக்கிறது; யாவருமே ஆண்டவனுக்கு அடிமை என்ற எண்ணம் அவர்களுக்கு அநுபவத்தால் கிடைத் திருக்கிறது

சூர சங்காரம் அச்சுறுத்தலின் உருவமாகிய சூரன் நற்குணங் களுக்கு வடிவமாகிய தேவர்களே ஒடச் செய்தான். அந்தச் சமயத்தில் அஞ்ஞானத்தைப் போக்குகின்ற ஞான சக்தி யாகிய வடிவேலினை ஏவி முருகப்பெருமான் தேவர்களுக்கு நலம் செய்தான் அஞ்ஞானத்தையும் அச்சத்தையும் ஒட்டி ஞானத்தைத் தருகிறவன் அவன் என்பதைச் குர சங்காரம் காட்டுகிறது. சுத்த ஞானம் எனும் புண்டரிகம் தருவாய் என்று முருகனப் பார்த்து விண்ணப்பம் செய்துகொண்ட அருணகிரிநாதருக்கு, அதனேயே பருப் பொருள் நிகழ்ச்சியாகக் காட்டிய குரசங்காரம் உடனே நினைவுக்கு வந்தது. அவன் குரனே வேல்கொண்டு அழித்துத் தேவர்களே ஓடாமல் வைத்தவன், அவர் களுக்குப் பெரும் காவலகை இருப்பவன் என்ற நினைவு வரவே, அந்தச் செய்திகளைச் சொல்லி முருகனே விளித் தார்.

சண்டி தண்ட வெஞ்சூர் மண்டலம் கொண்டு பண்டு அண்டர்.அண். -

டம்கொண்டு மண்டி மிண்டக் கண்டு உருண்டு அண்டர் விண்டு ஓடாமல், வேல் தொட்ட காவலனே. . . . .

பண்டு என்பது பழங்காலத்தில் என்னும் பொருள்

உடையது. நமக்குத் தெரிந்த பெரும் போர்கள் இதி

இரு-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/103&oldid=1402490" இலிருந்து மீள்விக்கப்பட்டது