பக்கம்:இரு விலங்கு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இரு விலங்கு


தாவடி யோட்டும் மயிலிலும் தேவர் தலையிலும்என் பாவடி ஏட்டிலும் பட்டதன் ருேபடி மாவலிபால் மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமாள் மருகன்றன் சிற்றடியே.' அந்த வகையில் முருகப்பெருமயனுடைய தி ரு வ ைர க் கிண்கிணி ஒசையையும், திருமாலினுடைய வ ல ம் யு ரி ஒசையையும் இங்கே ஒப்புநோக்குகிறார். .

முருகன் சின்னஞ்சிறு வடிவம் உடையவன். இளமை மாருப் பேரெழில் உடையவன். திருவரையில் அவன் கிண்கிணியை அணிந்திருக்கிருன். துள்ளித் துள்ளி அவன் விளையாடும்போது அது ஒலிக்கிறது. அந்த ஒலி யினல் தேவர்கள் மகிழ்கிறார்கள். அது பெரிது அன்று; அதனேக் கேட்டு அசுரர்கள் திடுக்கிடுகிறார்கள். இதனை முன்னே காட்டிய பாட்டுச் சொல்லியது. அந்த ஒலி நெடுந்துாரம் கேட்டது என்பதை இங்கே சொல்ல வரு கிறார். பதின்ைகு உலகமும் கேட்டது என்று சொல்லும் போது, திருமால் ஊதின சங்கு அவ்வளவு தூரம் கேட்க வில்க்ல; மிகக் குறுகிய தாரத்திற்குத்தான் கேட்டது: என்பதையும் சொல்லி ஒப்பு நோக்கச் செய்கிறார்.

முருகனுடைய கிண்கிணி ஓசை நெடுந்துாரத்திற்குக் கேட்டது. அது கிண்கிணியின் பெருமையைக் காட்டுவது மட்டும் அன்று. அதனே அணிந்த பெருமானுடைய வலியையும் காட்டுவது. 'இராமன் வில்லை ஒடித்தான். அந்த ஓசை நெடுந்துரம் கேட்டது' எனறு பாடுகிருர், கம்பர். வில்லின் பெருமையோடு அதை ஒடித்தவனின் பெருமையும் அதில் இணேந்திருக்கிறது.

முதலில் மர்மகிைய திருமால் எழுப்பியவலம்புரி ஒசை யைப் பற்றிச் சொல்கிறார்.

மண்கமழ் உந்தித் திருமால் வலம்புரி ஓசை அந்த விண்கமழ்சோலையும் வாவியும் கேட்டது;

இது பாகவதத்தில் வரும் 565

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/108&oldid=1283951" இலிருந்து மீள்விக்கப்பட்டது