பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎强 - அர்த்த பஞ்சகம் யிருக்கின்ற விளங்குகின்ற அழகிய நீண்ட மாடங்கள் உயர்ந்து தோன்றுகின்ற திருப்புலியூர் என்னும் திவ்விய தேசத்தின் வளத்தை இவள் இரவும் பகலும் இடை விடாது புகழ்கின்றாள் (3) ஊரின் வளப்பத்தைக் காட்டுகின்ற சோலையும் கரும்பும் பெரிய செந்நெற்பயிர்களும் சூழ்ந்து ஏர்களி னுடைய வளப்பம் விளங்குகின்ற குளிர்ந்த வயல்களை யுடைய குட்ட நாட்டிலே உள்ள திருப்புலியூரில் எழுந் தருளியிருக்கின்ற, குணங்களின் நன்மை முழுதும் செயலிலே விளங்கும்படி மூன்று உலகங்களையும் உண்டு உமிழ்ந்த தேவபிரானுடைய அழகிய திருப்பெயர்களைக் கிளர்த்தியோடே இன்று சொல்லுகின்றாள்; அதனைத் தவிர்ந்து, இந்தப் புனை இழை வேறு ஒரு வார்த்தையை யும் சொல்லுகிறாள் இலள். (4, ஆபரணங்களை அணிந்து கொண்டிருக்கின்ற அலங் காரமும் ஆடையை உடுத்திக்கொண்டிருக்கின்ற அழகும். வடிவிலே பிறந்திருக்கும் புதிய ஒளியும் நின்று நினைக்கப் புக்கால் இவளுக்கு இது நினைக்கக் கூடிய தன்மையது. அன்று; நீர்ச்சுனைகளிலே பெரிய தாமரை மலர்கள் மலர் கின்ற குளிர்ந்த திருப்புலியூரில் எழுந்தருளியிருக்கின்ற முன்னோன், மூன்று உலகங்களையும் ஆளுகின்றவன், உபகாரகன் ஆகிய எம்பெருமானுடைய திரு.அழகிலே மூழ்கினாள். (5) கடல் போன்ற திருநிறத்தையுடைய கண்ணபரா லுடைய திருஅருளிலே எப்பொழுதும் மூழ்கித் திருஅருள் களையும் அடைந்தமைக்கு அடையாளம் மறைக்க ஒண்ணாதபடி உள்ளன; திருவருளைச் செய்வதற்காக அவன் சென்று தங்கி இருக்கின்ற குளிர்ந்த திருப்புலியூர் என்னும் திவ்விய தேசத்தில் திருஅருளாலே வளர்கின்ற பாக்குமரத்தினது சிறந்த பழத்தைப் போன்று உள்ளது இப்பெண்பிள்ளையினுடைய சிவந்த திருப்பவளம். (6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அர்த்த_பஞ்சகம்.pdf/91&oldid=739101" இலிருந்து மீள்விக்கப்பட்டது