பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

豁莎 அர்த்த பஞ்சகம் இவள் அடைந்தது, மலைகள் போன்று பெரிய அழகிய மாணிக்கங்கள் பதித்த மாடங்கள் 7ಾರ್ಹ இவற்றினுடைய திரள்கள் மிகுந்து, தெற்குத் திக்கிற்கே திலகத்தைப் போன்ற குட்டநாட்டுத் திருப்புலியூரில் நின்ற மாயப்பிரானுடைய திருஅருளேயாம்; அஃது அல்லா மல், இவள் சரீரம், அழகிய குளிர்ந்த திருத்துழாயினது வாசனையை வீசுவதற்கு வேறு ஒரு காரணம் யாது உளது? (10) திருப்பாவை புள்ளுஞ்சிலம்பின காண் (6) என்ற பாசுரம் முதல், 'ஏல்லே இளங்கிளியே (15) என்ற பாசுரம்வரை உள்ள பத்துப் பாசுரங்கள் பள்ளி உணர்த்துவதையே பிரதான மாகக் கொண்டவை. இவை ஆன்மாவின் இயல்பான பகவதநுபவத்தையும், உறக்கமாகிய உபாய விரோதி சொரூபத்தையும் காட்டுவன. பரத்துவ திருக்குணம் மாத்திரமே விளங்கும் இடமான பரமபத நாதனை அநுபவிக்கப் பல கோடி நூறாயிரவர் திரளும்போது எல்லாத் திருக்குணங்களும் ஒருங்கே விளங்கும் இடமான கண்ணனை அநுபவிக்கக் கூட்டம் அதனிலும் விஞ்சி இருக்கவேண்டாவோ என்பதைக் காட்டுவது. பரமபோக்கி யமான ஒரு பொருளை ஒருவனாக அநுபவிக்கலாகாது என்றும், பத்துப் பேரோடு அநுபவிக்க வேண்டும் என்பதும் சாத்திர விதி. பெருங்காற்றில் அல்லது பெரு வெள்ளத்தில் இழியு மவர்கள் பெருந்திரளாக இழியுமாப்போலே எம்பெரு மான் திருக்குணங்களில் இழியுமவர்கட்கு காலாழும் செஞ்சழியும் கண்சுழலும் (பெரிய திருவந்:34) என்றும்; 'செஞ்சொற்கவிகாள்! உயிர் கா த் தாட்செய்மின்: (திருவாய்.10.4.1) என்று நம்மாழ்வார் அருளிச் செய்தபடி இழிந்தாரைக் குமிழ் நீருட்டவல்ல ஆழியான் என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அர்த்த_பஞ்சகம்.pdf/93&oldid=739103" இலிருந்து மீள்விக்கப்பட்டது