பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அர்த்த பஞ்சகம் நியமிக்க வேண்டும், என்று வேண்ட, செய்ய வேண்டிய படியை, இன்ன படியும் இன்ன படியும் என்று கை யோலை செய்து கொடுக்கின்றார்கள் இத் திருப் பாசுரத் தில். மழையை இறைவனது திருவருளாகக் கருதலாம் வள்ளுவர் வான் சிறப்பை இறைவனது திருவருளாக கூறியமையையும் சிந்திக்கலாம். இன்னும் ஆசாரியன் பலபல ஏதுக்களால் மேகமெனத் தகுதியுடையவனாதலால் மறைத்துச் சொல்லப்படுவ தாகக் கொள்ள வேண்டும். "மாயணை' (5) என்ற ஐந்தாம் பாசுரத்தில் மாய னுடைய பல பெயர்களை வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்துத் தூமலர் தூவித்தொழுதால் போய பிழைகளு (எம்பெருமானை அடி பணிவதற்கு முன்னர் செய்யப் பட் டவை) புகு தருவான் நின்றனவும் (அடி பணிந்த பின்னர் பிரகிருதி வாசனையினால் அபுத்தி பூர்வமாகச் செய்தவை) தீயிலிட்ட தாசுபோல் உருமாய்ந்து ஒழியும் என்று கூறப் பெற்றது. மாயனை-மாயமாவது ஆச்சரியம். ஆச்சரியம் செய் பவனுக்கு மாயன் என்று பெயர். 'சூட்டு நன் மாலைகள் தாயன ஏந்தி விண்ணோர்கள் நல்நீர் ஆட்டி அம் தூபம் தாரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால், ஈட்டிய வெண் ணெய் தொடு உண்ணப் போந்து... (திருவிருத். 21) ஆழ்வார் எம்பெருமானிடத்தில் அநுசந்தித்த மாயச் செய்கையும் ஆசாரியர் பக்கலிலே உண்டு. இருவரும் திரு நாட்டிலிருந்து இங்கு வந்து சில நாட்களே இருந்து செய் கின்ற மாயச் செயல்களன்றோ இவை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அர்த்த_பஞ்சகம்.pdf/73&oldid=739081" இலிருந்து மீள்விக்கப்பட்டது