பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அர்த்த பஞ்சகம் சூழ்ந்துஅகன்று ஆழ்ந்துஉயர்ந்த முடிவில் பெரும்பா ழேயோ! சூழ்ந்துஅத னில்பெரிய பரகன் மலர்ச்சோ தீ!ஓ! சூழ்ந்துஅத னில்பெரிய சுடர்ஞான இன்ப மேயோ! r. சூழ்ந்துஅத னில்பெரிய என் அவ அறச்சூழ்ந் தாயே. (r 10.10:10) என்பது நம்மாழ்வார் இத்தகைய அநுபவத்தை இந்த உலகினில் கண்டதாகும். திருவாய்மொழி திருவாய்மொழியில் ஆன்மா அடையும் பயன்கள் "எம்மா வீடு (2,9), ஒழிவில் காலமெல்லாம் (3.3) 'நெடுமாற்கு அடிமை (8.10), வேய்மரு' (10.3) என்ற நான்கு திருவாய்மொழிகளில் நுவலப்பெற்றுள்ளன. (1) புருஷாத்த நிர்ணயம்: எம்மா வீடு' (2.9) என்ற திருப்பதிகத்தில் இது காட்டப் பெறுகின்றது. கையையுடைய யானையினது துன்பத்தை நீக்கிய உபகாரகனே! சுவாமியே! எத்தகைய பெரிய மோட் சத்தின் தன்மையைப் பற்றியும் பேசோம்; நினது சிவந்த பெருமை பொருந்திய திருவடித் தாமரைகளை என் தலையின்மீது விரைவில் சேர்க்க வேண்டும்; அடியேன் விரும்புவது இப்பேறேயாகும். (1) என்னுடைய, கருமை படிந்த ஒளியையுடைய மாணிக்கம் போன்ற நிறத்தையுடைய எந்தையே! எப் பொழுதும் யான் உன்னிடத்தில் கேட்பது இஃதேயாகும்; எது? எனில்: தனது முயற்சி கொண்டு அடையமுடியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அர்த்த_பஞ்சகம்.pdf/99&oldid=739109" இலிருந்து மீள்விக்கப்பட்டது