பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனை அடைவதற்குத் தடையாய் உள்ளவைகள் 141 உடனே அந்தத் திவ்வியத் தம்பதிகளான இருவர் காலிலும் விழுந்து இரக்கின்றனர் என்பது ஈண்டு அறியப்படும். மெத்தென்ற பஞ்ச சயனம் :மென்மை, குளிர்ச்சி, நறு மணம், வெண்மை, விரிவு என்றவகைச் சிறப்புகள் பொருத்திய படுக்கைக்குப் பஞ்ச சயனம்’ என்று பெயர். இந்த ஐவகையில் மெத்தென்றிருத்தல் சேர்ந்திருந்தாலும் தனிப்பட “மெத்தென்ற' என்று சிறப்பிக்கப் பெற்றதற்குக் காரணம் அதன் முக்கியத்துவத்தைக் காட்டுவதற்காக. 'மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்' என்ற பாசுரத்தால் தெரிவிக்கப் பெற்ற அர்த்த பஞ்சகமே இங்கு மெத் தென்ற பஞ்சசயனமாகக் கருதப்பெற்றதாகவும் கொள்ளலாம். இந்தப் பஞ்ச சயனம் சாத்திரங்களால் தாங்கப் பெறுகின்றது என்பதைக் கோட்டுக்கால் கட்டில் என்ற தொடர் குறிப்பிடுகின்றது. 'முப்பத்து மூவர்' (20)என்கின்ற இருபதாம் பாசுரத்தி லும் கண்ணபிரான், பின்னைப் பிராட்டி என்ற இருவரை யுமே எழுப்புகின்றனர் ஆயச்சிறுமியர்கள். இதற்கு முன்னுள்ள பாசுரத்தில் கண்ணபிரானுடைய சிருங்கார ரசவிதக்தனாயிருக்கும் தன்மையைச் சொல்லி அநுபவித் தார்கள். இப்பாசுரத்தில் அவனது பெரு மிடுக்கைச் சொல்லி அநுபவிக்கின்றார்கள். விசிறியையும் கண்ணாடி யையும் உன் மணாளனையும் தந்து நிராட்டுவிக்கவேண்டு மென்று வேண்டுகின்றனர். நீராட்டு என்பது சேர்ப்பி' என்பது பொருள். பகவத் சந்நிதியில் கைங்கரியமே புருஷார்த்தம் என்பது காட்டப் பெறுகின்றது. 'செப்பன்னமென்முலை' என்று தொடங்கி நப்பின் னைப் பிராட்டியின் உறுப்புகளின் அழகு பேசப் பெறுகின் றது. ரீவசனபூஷணத்தில் பிராட்டி'சேதநனை அருளாலே