பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈசுவரனின் இயல்பு

27


மணவாளனின் திருமேனியில் ஈடுபட்ட தொண்டரடிப் பொடிகள்,

இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்

- திருமாலை-2

என்று கூறிப்போந்தார்9. பக்திசாரர் என வழங்கப்பெறும் திருமழிசையாழ்வார் திருக்குடந்தை ஆராவமுதனின் ஓர் உரையாடலையே நிகழ்த்துகின்றார். எம்பெருமானின் சயனத் திருக்கோலத்தில் ஈடுபட்டு, -

நடந்த கால்கள் நொந்தவோ
நடுங்க ஞாலம் ஏனமாய்
இடங்த மெய்கு லுங்கவோ?
விலங்கு மால்வ ரைச்சுரம்
கடந்த கால்ப ரந்தகா
விரிக்க ரைக்கு டக்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து
பேசு வாழி

- திருச்சந்த-16

என்று சயனத்திருப்பதற்குக் காரணம் வினவுகின்றார். இவரது பக்திப் பெருக்கில் திளைத்த எம்பெருமானும் இருவருக்கு மறுமொழி தருவான்போல் எழுந்திருக்க முயல அந்த அழகில் "சிறுமாமனிசரின்" (திருவாய் 8 , 10 : 3) கண் எச்சில் படும் என்று அஞ்சிய ஆழ்வார்


9. இந்த இடத்தில் தில்லைச் சிற்றம்பலவனின் திருமேனி அழகினைக் காணப்பெற்றால் 'மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' (4, 81 : 4) என்ற அப்பர்பெருமானின் திருவாக்கை நினைவு கூரச் செய்கின்றது.