பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அர்த்த பஞ்சகம் வேங்கடத்தில் எ ழு ந் த ரு வளி யி ரு க் கி ன் பேரொளி யுருவனாகி எல்லா உலகத்துாராலும் தொழப்படுகின்ற முதற்காரணப் பொருளாக விளங்குகின்ற வடிவை யுடையவன் என்று கூறினால் பெரும்ையாகுமோ? அன்று. (5) திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவர்க்கு வணக்கம் என்று சொல்லுதல் எளிதில் செய்யக்கூடிய காரியமாகும்; அதனைச் சுமந்தவர்க்கு, தீர்க்கக் கூடிய கடன்களும் சரீர சம்பந்தம் காரணமாக வருகின்ற, நல்வினை தீவினைகளும் வெந்து அழிந்துவிடுய்; அடியார் களாகிய தாங்கள், தங்கட்குத் தக்கதான கைங்கரியத்தையே செய்வார்கள். (6), நித்திய சூரிகள், சேனைமுதலியாரோடும் வந்து சிறந்த பூக்களையும் நீரையும் விளக்கையும் வாசனைப் புகையையும் தாங்கிக் கொண்டு வணங்கி எழுகின்ற திருலேங்கடம் நமச்கு ஒத்ததாகயுள்ள வீடுபேற்றினை நல்கக் கூடிய பெரிய மலையாகும், (7) கோவர்த்தனம் என்னும் மலையைத் துாக்கிக் குளிர்ந்த மலையினின்று பசுக்களையும் ஆயர்களையும் காத்தவன்; அக்காலத்தில் உலகத் ைத அளந்த உபகாரகன்; எல்லார்க்கும் மேலானவன்; இவ்வாறான இறைவன் சென்று தங்கியிருக்கின்ற, திருவேங்கடமலை என்னும் ஒன்றையுமே வணங்க நம்முடைய வினைகள் நீங்கும். (8. நோய்களை அழியும்படி செய்கின்றவனான திருவேங். கடத்தில்இருக்கின்ற எம்பெருமானது அன்றலர்ந்ததாமரை மலர்போன்ற திருவடிகளை வாயிலும் மனத்திலும் வைப் பார்ச்கு முதுமை பிறப்பு இறப்பு இவைகள் நீங்கும்.(9)