பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மா அடையும் பயன்கள் - 73. உனது திருவடிகளை யான் அடையும்படி ஞானமாகிய கையைக் கொடு; காலம் நீட்டித்தல் செய்யற்க. (2). 'கொடிய பாவங்களைச் செய்யாதே' என்று அருளைச் செய்கின்ற, என்னுடைய, கையிலே தரித்திருக்கின்ற சக்கரத்தையுடைய கண்ணபிரானே! கோழையானது கழுத்தை அடைக்கின்ற காலத்திலும் நின் திருவடிகளை மறவாமல் ஏத்தும்படி எனக்கு அருள் செய்க. (3) ‘எல்லாக் காலத்திலும் எனக்கே அடிமை செய்வாய்' என்று என் மனத்தின்கண் வந்து பிரிதலின்றி நிலை பெற்று நின்று தனக்கே நான் உரியனாம்படி என்னை ஏற்றுக் கொள்ளும் இதுவே எனக்குத் தகுதியாகக் கிருட்டிணனிடத்தில் யான் விரும்பிக் கொள்ளுகின்ற பயனாகும், (4). யானும் சிறப்புடைய மோட்சம் என்ன, சுவர்க்கம் என்ன, நரகம் என்ன இவற்றை இறச்கின்ற காலத்தில் பொருந்துக; பொருந்தா தொழிக, பிறப்பில்லாத பல பிறவிகளையுடைய பெருமானை மறதி என்பது சிறிது மில்லாமல் எப்பொழுதும் அநுபவிப்பேன். (5) மகிழ்ச்சியையுடையவர்களான தேவர்கள், காணப் படுகின்ற அசித்து, கண்களால் காண முடியாத ஆன்மாக்கள் (சித்து), மகிழ்ச்சியைக் கொள்ளச் செய்கின்ற ஒளியுருவமான சந்திர சூரியர்கள் ஆகிய இப்பொருள் க்ளாக விரிந்திருக்கின்ற இறைவனே! மகிழ்ச்சியையுடைய மனமும் சொல்லும் தொழிலும் ஆகிய இவற்றைக் கொண்டு என்றும் மகிழ்ச்கியுடன் கூடி நான் வணங்கும் படி நீ எழுந்தருள வேண்டும். (6) உனது அழகிய திருவடித் தாமரைகளில் மீளாமல் யான் வந்தடையும்படி தாராதவனே! உன்னை என்னுடைய மனத்தில் வைக்குமிடத்தில் ஒரு நாளும்