பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 . அர்த்த பஞ்சகம் கோபுரவாசல் போன்ற வெளிப்புறத்து வாசலைக் காப்பவன்-கோயில் காப்பான் என்றும், கொடி மரத்தின் அருகிலுள்ள வாசல் போன்ற உட்புறத்து வாசலைக் காப்பவன் வாசல் காப்பான் என்றும் இவண் கூறப் பெறுகின்றனராகக் கொள்ள வேண்டும். பெரிய இடத் துக்குப் போகின்றவர்கள் துவார பாலகர்களின் புருஷ காரம் முதலில் தேவைப்படுவதை அறிவதைப் போல இவர்களும் அறிகின்றனர். ஆகவே, அவர்களின் தயவை வேண்டி நிற்கின்றனர். திருப்பாவையில் நீராட்டம்’ என்ற குறிப்பு ஐந்து பாசுரங்களில் வருகின்றது. நீராடப் போதுமினோ (1), "நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி ரோடினால் (3), நாங் களும் மார்கழி நீராட மகிழ்ந்து (4, 'இப்போதே எம்மை நீராட்டு’ (20), மார்கழி நீாாடுவான்' (26) என்று. வந்துள்ளமையைக் காணலாம். ஆக, இவற்றில் ஆயச் சிறுமிகளின் குறிக்கோள் நீராடுதல்' என்பது தெரிய வந்தாலும், அவர்கள் நீராடும் இடமான பொய்கைக்கோ யமுனை ஆற்றுக்கோ சென்றதாகப் பாசுரங்களில் குறிப்பு இல்லை. ஆனால் தந்த கோபருடைய திருமாளிகைக்குச் சென்று. அங்கு தப்பின்னைக் கொங்கைமேல் வைத்துக் கிடந்த மணிமார்பனை (19) உணர்த்தி, அவர்களைத் தோத்தி ரம் செய்து, "சிற்றஞ்சிறு காலை எழுந்து இங்கு நாம் வந்தது எதற்காகவென்னில், உன்றன்னோடு உற்றோமே யாவோம், உனக்கே நாம் ஆட் செய்வோம்’ (29) என்று விண்ணப்பம் செய்வதற்காகவே என்று தலைக்கட்டியுள்ள தைக் காண்கின்றோம். இங்ங்னம் திவ்விய தம்பதிகளிடம் சென்று சேவிப்பதுதான் இவர்கள் கொண்ட மார்கழி நீராட்டம்' என்பது தெளிவாகின்றது. ஆகவே, பாசுரங் களில் குறிப்பிடப் பெற்ற நீராட்டம் தண்ணிரில் தோய்