பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அர்த்த பஞ்சகம் என்ற பேயாழ்வாரின் பாசுரத்தில் இந்த இயல்பினை அறியலாம். ஞானமே பக்தி நிலையாக முதிர்கின்றது. இதுவே "ஞானம் கனிந்த நலம்' (இாாமாநுச நூற். 66) என்று அமுதனார் குறிப்பிடுவது. இந்த நிலையில் முமுட்சு கள் தம் முனைப்பை அகற்றி இறைவனுடைய சங்கற் பத் துக் கு அடிபணிந்து இறைவனுடன் நிரந்தரத் தொடர்பு கொள்வதற்குத் தயாராகின்றனர். இந் நிலை யில்தான் நமக்கும் இறைவனுக்கும் அறுபடாத தைல தாரை போன்ற தொடர்பு ஏற்படுகின்றது. நாளாக நாளாக இந்நிலையில் ஒரு புதிய ஆற்றல் தோன்று கின்றது. வான நூல் அறிஞர் பூமியின் சிறுமையையும் அதனை ஈர்த்து நிற்கும் கதிரவனின் பெருமையையும் உணர்வதுபோல் பக்தர்களும் சமுசாரத்தில் உழலும் தம் ஆன்மாவின் சிறுமையையும், எல்லா உயிர்களையும் புரக்கும் இறைவனின் பெருமையையும் பேராற்றலை யும் உணர்கின்றனர். இந்நிலையில் சீவான்மா பரமான் மாவுடன் கலக்கின்றது. அப்பொழுது அது கடலில் கிடக்கும் கடற் பஞ்சு போன்ற நிலையினை அடைகின்றது. இந்த நிலையையும் பரபக்தி, பரஞானம், பரமபக்தி என்று. மூன்று பிரிவுகளாக வேறுபடுத்திக் காட்டும் மரபும் உண்டு. இந்த மூன்று நிலைகட்கும் முறையே பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூன்று பெருமக்கள் எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர் என்று பொருத்திக் காட்டும் மரபும் உண்டு. (4) பிரயத்தியோகம்: பக்திநெறியை எல்லோராலும் அநுட்டிக்க முடியாது. ஆகவே, உயர்ந்தோர், தாழ்ந் தோர், கற்றவர், கல்லாதவர் என்ற வேறுபாடு இன்றி. எல்லோராலும் மேற்கொள்ளக்கூடிய நெறியொன் றினைக் கண்டனர் மெய் விளக்கம் பெற்ற மேலோர்.