பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனை அடையும் வழிகள் 93 இந்தப் பக்தி நெறி ஆழ்வார் பாசுரங்களில் ஆங்காங்கு குறிப்பிடப் பெற்றுள்ளது. நாலாயிரத்தை ஒதுவார் இதனை நன்கு அறிவர். அறிந்து, ஐந்தும் உள்ளடங்கி, ஆய்மலர் கொண்(டு), ஆர்வம் செறிந்த மனத்த ராய், செவ்வே-அறிந்து அவன்தன் பேர்ஓதி ஏத்தும் பெருந்தவத்தோர் காண்பரே கார்ஒத வண்ணன் கழல். (இரண், திருவந்: 6) [ஐந்து - ஐந்து பொறிகள்; ஆய்மலர் - ஆராய்ந்த பூக்கள்: ஆர்வம் - பக்தி; செவ்வே - நன்றாக, பேர்-திருநாமங்கள்; கழல்-திருவடிகள்) என்ற பூதத்தாழ்வாரின் பாசுரத்தில் இந்த பக்திநெறியைக் காணலாம், விஷ்ணுவை என்றுமே தன் சித்தத்துள் வைத்திருக்கும் விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வாரின், மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை காட்டி ஆர்வம் என்பதோர் பூஇட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே (பெரியாழ். திரு 4.5: 3) (மார்வம் - இதயம்; ஆர்வம் - பக்திநெறி; அரவதண்டம் - யமதூதர்களால் வருந் துன்பம்) என்ற பாசுரப் பகுதியில் இந்நிலையைக் காணலாம்.