பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனை அடையும் வழிகள் 10Ꭵ ஆழ்வார் பாசுரங்கள்: இப் பிரபத்தி நெறி ஆழ்வார் பாசுரங்களில் குறிப்பிடப்பெற்றுள்ளது. அடைந்த அருவினையோடு அல்லல் நோய் பாவம் மிடைந்தவை மீண்டொழிய வேண்டில் - நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் முரணழிய முன்னொருகாள் தன்னிலங்கை வைத்தான் சரண் (முத. திருவந். 59) (அடைந்த-பற்றிக் கிடக்கும்; வினை-பழவினை : அல்லல் - மனத்துன்பம்; பாவம் - இப்போது செய்தது; மிடைந்தவை - ஆன்மாவை மூடிக் கிடப்பவை; மீண்டு - நீங்க: நுடங்கிடை - மெல்லிய இடையையுடைய பிராட்டி! என்ற பொய்கையாழ்வார் பாசுரத்தில் இந்நெறியின் குறிப்பைக் காணலாம். வினை, நோய், பாவம் இவை வாசனையோடு நீங்க வேண்டுமானால் சக்கரவர்த்தித் திரு மகனைச் சரணம் புகுதலேயாகும் என்ற குறிப்பை இதில் காணலாம். - திருமங்கையாழ்வார் நைமிசாரணியத்து எம்பெரு மான் திருவடிகளில் சரண் புகுவதைப் பாசுரங்கள் தோறும் ஒரு முறைக்கு ஒன்பது முறையாகத் 'திருவடி அடைந்தேன்' என்று சொல்லுவதைக் காண்கிறோம். பிராட்டியை முன்னிட்டுச் சரணாகதி செய்வது சொரூப மாகையால் இவரும், தேன்.உடைக் கமலத் திருவினுக்கு அரசே! நான்உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன் (பெரி. திரு 1-6:9)