பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 அர்த்த பஞ்சகம் --- திருத்தும், ஈசுவரளை அழகாலே திருத்தும் என்று அருளிச் செய்திருப்பதை ஈண்டு நினைவு கூரலாம்". பூர்வசனபூஷ ணத்தில் சாதித்தது பெரிய பிராட்டியைப் பற்றியே அன்று என்று ஐயுற வேண்டாசபடி நப்பின்னை நங்காய், திருவே! என்று அருளிச் செய்யப்பட்டது. இவளையும் திருவின் அம்சபூதையாகக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பு. இறுவாய் : இங்ங்ணம் அர்த்த பஞ்சக ஞானம் பிறந்து, முமுட்சு நிலையை அடைந்து சம்சாரத்திலே இருக்கும் சேதநனுக்கு வீடுபேறு அடையும் அளவும் மீண்டும் சம்சாரம் மேலிடாதபடி காலட்சேபம் பண்ணும் முறையையும் பிள்ளை உலக ஆசிரியர் விளக்குகின்றார். வருணாசிரம முறையிலும் வைணவத்துவ முறையிலும் தீதின்றி வந்த பொருள்களைச் சம்பாதித்து அவற்றைப் பகவத் விஷயத்திலே நிவேதித்து தானும் உகந்து கொண்டு பாகவதர்கட்கும் விநியோகித்து உடலைப் போற்றுவதற்கு மாத்திரம் பிரசாதமாகக் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும். மிக்க சிரமத்துடன் தத்துவ ஞானம் பிறபித்த ஆசாரியன் சந்நிதியிலே மிகவும் பணிவுடன் அவனுடைய விருப்பத்திற்கிணங்க இருந்து வ ரு த ல் வேண்டும்; தன்னுடைய ஞானமின்மையை அநுசந்திக்க வேண்டும். எம்பெருமான் சந்நிதியில் தன்னுடைய தாழ்வை அநுசந்திக்க வேண்டும். வைணவர்கள் சந்நிதியில்தான் பகவானுக்கு வசப்பட்டிருத்தலைப் புலப்படுத்திக் கொள்ள 5. பூர்வசனபூஷணம்-சூத்திரம்-14 (புருடோத்தம நாயுடு பதிப்பு)