பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 அர்த்த பஞ்சகம் என்னும் திவ்விய தேசத்தில் திருவனந்தான்மீது எழுந் தருளியிருக்கின்ற எம்பெருமானிடத்தில் உள்ளதாம் என் உயிர். (4) சிறந்த அன்பினையுடைய தோழிமீர்காள்! சிறந்த பார்ப்பனர்களால் செய்யப்படுகின்ற வேள்விகளினின்றும் மேல் எழுந்த புகை, கரிய நிறத்தைக் கொண்டு உயர்ந்த ஆகாயத்தைமறைக்கின்ற குளிர்ந்த திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற வெல்லக் கட்டியைப் பழத்தை இனிய அமுதத்தை என் நலத்தை எல்லாம் கொண்ட சுடரை என் கண்கள் காண்பது என்று கொல்? (5) கோவைக் கனிபோன்ற வாயினையுடைய பெண்களே! எல்லாவிடங்களிலும் வண்டுகளினுடைய பாண்குரலும் இளந்தென்றலுமாக, மிக உயர்ந்த கிளைகளையுடைய மரங்கள் நெருங்கியிருக்கின்ற வளப்பம் பொருந்திய கானலையுடைய திருவல்லவாழ் என்ற திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற மாட்சிமை அமைந்த அழகிய பிரானாகிய வாமனனுடைய தாமரைமலர்போன்ற திருவடிகளை, வினையேன் காண்பது எந்நாளோ? (6) பாவை போன்ற பெண்களே! நீர் நிறைந்த பெரிய குளங்கள், உயர்ந்த தாமரை மலர்களையும், செங்கழுநீர் மலர்களையும், பெண்களினுடைய ஒளி பொருந்திய முகத்தையும் கண்களையும் போன்று ஏந்திக் கொண்டிருக் கின்ற திருவல்லவாழ் என்கின்ற திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கிள்ற நாதனும் இவ்வுலகங்களையெல் லாம் உண்ட நம்பிரானுமான சர்வேசுவரனுடைய, மலர்களால் மேலே அலங்கரிக்கப்பெற்ற திருவடிகளை நாடோறும் தொழுவதற்குக் கூடுமோ? (7)