பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனை அடைவதற்குத் தடையாய் உள்ளவைகள் 137 யின்கண் அவதரித்த மாலை அணித்த தோள்களையுடைய கண்ணபிரானை அல்லாமல் பாதுகாக்கக் கூடிய பொருள் வேறு ஒன்றும் இல்லை. (9) கண்ணபிரானாகிய அவன் அன்றிப் புகல் ஆவார் வேறு ஒருவரும் இலர் என்னும் அந்த உண்மை நிலை நிற்பதற்காகவும், பூபாரத்தைப் போக்குவதற்காகவும் வந்து வடமதுரையிலே அவதரித்தான்; மானிடர்காள்! உங்களுடையதாக நினைத்திருக்கின்ற பொருள் உளதாகில் உறுதியாக அதனை அவன் திருவடிகளில் சேர்த்து உய்ந்து போமின்; வேறு ஒன்றும் ஆலோசிக்க வேண்டா, உங்க ளுடையனவாக நீங்கள் நினைத்திருக்கும் எல்லாப் பொருள்களும் அவனுடையனவேயாகும்; அங்ங்னம் அன்றி இதற்கு மாறாக ஒன்றும் இல்லை. (10) திருப்பாவை தடைகளை நீக்க வேண்டுமானால் எம்பெருமா னையே பற்ற வேண்டும். திருவாய்மொழிப் பாசுரங்கள் இதனையே வற்புறுத்துவதை மேலே கண்டோம். திருப் பாவையில் 16 முதல் 20 பாசுரங்கள் பகவத் சொரூப மாகிய இரட்சகத்துவத்தையே குறிப்பிடுவதாக நம் முன்னோர் குறித்துப் போயினர். இக்கருத்துகளை ஈண்டு விளக்குவோம். ‘நாய்கனாய் நின்ற (16) என்ற பதினாறாம் பாசுரம் ஆயச் சிறுமிகள் நந்தகோபர் திருமாளிகை வாசலில் சென்று சேர்வதைக் குறிப்பிடுகின்றது. திருக்கோயில் காப்பானையும் திருவாயில் காப்பானையும் நோக்கித் திருக்காப்பு நீக்குமாறு இரங்குவதைக் குறிப்பிடுகின்றது.