பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


பொன்மனச்செமமல் எம்.ஜி.ஆரின் தமிழக அரசிலே, மூன்றாவதான முறையிலே, அரசவைக் கவிஞராக அமர்ந்து, புகலோச்சியவர் ஆவார்.

கவிஞர் முத்துலிங்கம், மக்கள் திலகம் மீது பிள்ளைத் தமிழ் பாடியவர். திரை இசைப் பாடல்கள் என்ற நூலையும் யாத்தவர்.

சிந்தனையாளர் இளங்கோ, தான் தீட்டிய சிலப்பதிகாரம் என்ற தமிழர் பண்பாட்டு நூலிலே, நவமணிகளுள் இரண்டான முத்தையும் - மாணிக்கத்தையும் பாத்திரங்களாக மாற்றி, பாண்டிய மாமன்னன் நெடுஞ்செழியன் அவையிலே மோதவிட்டார்.

பொற்கொல்லனின் வஞ்சகமாக உலா வந்த முத்து, மன்னி கோப்பெருந்தேவி காற்சிலம்புப் பரல்களாகத் திகழ்ந்து கோவலன் தலையை வீழ்த்தியது.

கண்ணகி தேவியின் மாணிக்கப் பரல்களான சிலம்பிலே கொந்தளித்த கோபம், சாயாத பாண்டியன் செங்கோலைச் சாய்த்தது.

மன்னன் மாண்டான். நீதியின் கோலை நிமிர்த்தினான். மதுரை எரிந்தது. மன்னி, கோப்பெருந்தேவியும் மாண்டாள். சிலம்பிலே இரண்டு மணிகள் சிரித்த சிரிப்பு இக்காட்சிகள்.

கிரேக்க நாட்டு மன்னன் ஒருவன், சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட பொற் கிரீடத்தை தான் சூடிக் கொள்ள விரும்பினான்.

அதற்காக அரண்மனைப் பொற்கொல்லனிடம் எடை போட்டு பொற்கட்டிகளைக் கொடுத்தான் மன்னன்.

எள் மூக்களவுகூடக் குறையாமல், மன்னன் அளித்த பொன்னின் எடையளவோடு, கிரீடத்தைச் செய்து கொடுத்தான் - கிரேக்க அரண்மனைப் பொற்கொல்லன்.

அறிவியல் உலகுக்கு அறைகூவல் விடுத்தான், உண்மை எடையை அறிந்து அவனிக்குக் கூறுமாறு மன்னன் ஆக்ஞையிட்டான்.

அற்புத சிற்ப வடிவங்களைச் செதுக்கி அழகாகச்

125