பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


“No virtu is higher than to łove all men, and there no loftier aim in divine than to profit all men."

"எல்லோரும் இன்பமாய் வாழ, அன்பு புரிவதே தருமம். மனித சமுதாயத்திற்கு இனிதாக உதவி செய்வதைக் காட்டிலும், தெய்வீகத்தின் உயர்ந்த குறிக்கோள் வேறு யாதும் இல்லை” என்று பன்னூறு ஆண்டுகட்கு முன்பே சீன நாட்டு மதாபிமானி கன்ஃபூசியஸ் குறிப்பிட்டார்.

அந்தத் தத்துவத்தின் சாயலை, இன்று நான், நமது அருட்திரு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் காண்கின்றேன்.

மக்களாகப் பிறந்த எல்லோரும் இன்பமாய் வாழ்ந்திட, ஜன்மோர்ச்சாஜன்கல்யாண், என்ற சங்கங்களை, அவர் நிறுவி, அவற்றின் வாயிலாக மக்களுக்கு நற்றொண்டு நாட்டி வருகிறார்.

எல்லார்க்கும், எல்லாம் நிகழ்பவற்றை அறியும் ஆண்டவனை நோக்கி, வடலூர் வள்ளல் பெருமான் "அம்மையே அப்பா' என்று உருகி உருகிப் பாடினார்.

இறையடிகளார்களுக்குத் தாயும் தந்தையும் கடவுளே என்று, கண்ணிர் மல்க மல்கக் கூறி அவர் உருகினார்.

அந்தத் தத்துவக் காட்சியிலே எழுந்த அவ்வுத்தம ஞானியின் உள்ளத்து உருக்கத்தை உணர்ந்த அருளாளர்கள் பலருண்டு.

நமது மாமுனிவர் அவர்களும், பக்தகோடிகளுக்கு ஆற்றி வரும் உள்ளம் உருக்கும் அறிவுரைகள், ஞான ஒழுக்கங்கள், தாய் ஊட்டிப் போற்றிடும் சேய்களொத்த காட்சிகளாக அமைந்துள்ளன.

அந்தத் தெய்வத்தின் அருட்குரலை நாடு பின்பற்றுவதை இன்றும் பார்க்கின்றோம்.

இதைத்தான் பிளேட்டோ என்ற கிரேக்க ஞானி,"The people need the guidance of divine philosphers as desires need the enliehtenment of knowledge" என்றார்.

"மனவிருப்பங்களுக்கு அறிவு விளக்கம் போல், அவனி வாழ் மக்களுக்குத் தெய்வீக ஞானிகளுடைய ஆதரவும் அவசியமாயுள்ளது" என்று அறிவு ஒளி பரப்பினார்.

141