பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

75

 விளக்கு; குலையாத முத்தாரம் என்பதெல்லாம் அவளுக்கே ஏற்கும். புதுமையையும் இளமையையும் அவாவுவது மனித உள்ளத்தின் தன்மை இல்லையா?

மாறன் அன்னக்கிளியை விரும்பினார். தாம் விருப்பம் வைத்து விட்டால் போதும்; எதுவும் இலகுவில் தமக்குக்கிட்டிவிடும் என்று நம்பிக் கொண்டிருந்தவர் அவர். அவருக்கு-அவருடைய நம்பிக்கைக்கு-முதல் சூடாக விழுந்தது அன்னத்தின் மறுப்பும் போக்கும். இரண்டாவது சூடுதான் அமுதவல்லி முத்தாரத்தை அவரிடம் அளிக்க மறுத்த செய்கை.

தோல்வியால் - அன்னத்தின் மறுப்பினால் - கனன்று கொண்டிருந்த மாறன் அன்றே அமுதத்தின் அழைப்பை ஏற்று அவள் வீடு செல்ல எண்ணினாரில்லை. அத்துடன் அவரிடம் முக்கியமான அலுவல்கள் பற்றிப் பேசுவதற்காக இரண்டு பேர் வந்திருந்தார்கள். அவர்களுடைய வருகைதானே வேடன் கைப்பட்ட மாடப் புறாவெனத் திண்டாடிய அன்னக்கிளி அவரிடமிருந்து தப்பி ஓடுவதற்குத் துணை புரிந்தது!

வந்தவர்களில் ஒருவன்தான் எயில் ஊர் ஆந்தை என்பான். மற்றவர் திரைகடலோடித் திரவியம் தேடும் ஒரு வணிகர். முத்து வாணிபத்தில் பெயர் பெற்றிருந்தவர். திருமாறனிடம் நல்ல நல்ல முத்துக்களும் முத்தாலான அழகுப் பொருள்களும் உண்டு என அறிந்து ஆந்தையின் துணையோடு வந்தார்.

'இம்முறை நான் யவனம், ரோமாபுரி முதலிய இடங்களுக்கெல்லாம் செல்வேன். ரோம் நாட்டு அரசிக்கு அழகிய முத்தாரம் ஒன்று வேண்டும் என்னும் செய்தி