பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109

தைக் கவிராயர் என்று வழங்கலாயினர். சிலர் 'பால கவீசுரர்' என்று பின்னும் மதிப்பாகக் கூறினர்.

மருத பாண்டியருடைய அவைக்களப் பெரும் புலவராக விளங்கினார் குழந்தைக் கவிராயர். அவர் குன்றக்குடியில் எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுள் மீது ஒரு கோவையைப் பாடி அரங்கேற்றினார். அப்போது மருத பாண்டியர் அவருக்குப் பல வகையான பரிசுகளை அளித்துப் புலவர் மருதன்குடி என்ற கிராமத்தையும் முற்றூட்டாக வழங்கினார்.

தம்மை வளர்த்துப் பாதுகாத்த மருத பாண்டியரைச் சாந்துப் புலவராகிய குழந்தைக் கவிராயர் அந்தக் கோவையில் பலபடியாகப் பாராட்டியிருக்கிறார்.

குட்டி நாகபந்தத்தால் தம் புலமையை இளமையில் காட்டிய குழந்தைக் கவிராயர் மருத பாண்டியருக்குத் தோழராகி வாழ்ந்தார். அவர் செய்த போரில் துணை நின்று வாளெடுத்துப் போர் செய்தாரென்றும் கூறுவர்.இ. கதை-8