பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னக்கிளி

111


உணர்ச்சி அவள் பேச்சுக்குத் தடை விதித்தது. துயரம் அவள் தொண்டைக்குழியில் திரண்டு, அவளைப்பேசவிடாமல் தடுக்கவும் அவளது அழகிய கண்கள் கொதிக்கும் நீரைக் கொட்டும் அருவிகளாக மாறின. அவள் அவன் மார்பில் முகம் புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.

எதையும் விளங்கிக்கொள்ள இயலாதவனாய் திருமலைக் கொழுந்து திகைப்புடன் நின்றான். அவனது ஒருகரம் அவள் மெல்லுடலை ஆதரவோடு அணைத்து அவளுக்குப் பலம் தந்தது. ஒரு கரம் அன்போடு அவள் தலையை வருடியது. 'அன்பே! அன்னம்! அழாதே. உனக்கு நான் துணையாவேன். கவலைப்படாதே. நீ ஏன் சாகவேண்டும்? வாழ வேண்டியவள் நீ. நீ நன்றாக, சுகமாக வாழத்தான் போகிறாய்? உன்னை நான் வாழ வைப்பேன்' என்று ஆறுதல் கூறினான்.

அவள் முகம் புத்தொளி பெற்றது. அவள் உள்ளத்தில் நிறைந்த புதிய உற்சாகமும் நம்பிக்கையும் தந்த புத்தழகோடு அவள் முகம் நிமிர்ந்து பார்த்தாள். அவளது இதழ்கள் முழு நகை காட்டின.

இப்பொழுது என் அன்னக்கிளி எவ்வளவு அழகாக இருக்கிறாள். ஆகா!' என்று மகிழ்வோடு அவள் கன்னத்தை விரல்களால் வருடிய திருமலை அங்கு உதடுகளால் அன்பு முத்திரை பதித்தான்.

அவளிடம் நடந்த நிகழ்ச்சிபற்றி ஒருவாறு கேட்டறிந்து கொண்ட திருமலை சிரித்தான். 'அமுதவல்லி வீண் பழி சுமத்தினாள் என்பதற்காக ஓடி ஒளிந்துவிட்டாள், உன் மீது ஏற்பட்ட களங்கம் மறைந்துவிடுமா கண்ணே? நீதான்