பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம். 83 பயிர்கள் மழைத்தாரையால் எவ்வாறு செழிப்புற்று விளங் குமோ அவ்வாறு, விடது.கர்ந்து கிறங்கெட்ட அவனது உடல், அமுதம் அருந்தியதால் அழகு மிகுந்து, பதினுயிரம் பட்டத்து யானைகளின் பலக்கையும் பெற்று விளங்கிற்று. பின்பு எட்டு நாள் வரை அவன் அங்காகலோகத்தில் வாசுகி அரண்மனையில் விருந்தாகத் தங்கியிருந்தான். இவன் இங்கு இவ்வாறிருக்க, அஸ்தினபுரத்தில் குந்தி தேவி பிமனே இராப்பொழுது வந்தும் காணுமையால் இரா முழுதும் ஊண் உறக்கமின்றி வருந்தினுள். :பீமன் எங்குச் சென்ருன்? என்று உதிட்டிசன் முதலிய பீமனது துணை வர்கள், வேறுவேறு பக்கங்களில் ஒடிக் காடு, ஆறு, மலை முதலிய இடங்களில் தேடி, காணுது இனி என் செய்வ' தென்று நாடி நடுங்கினர்கள். காற்றில்லாத ஏனைய நான்கு பூதங்களையும்போல் பீமனை இழந்த பாண்டவர்கள் மனம் சுழன்று வருந்திஞர்கள். வருந்தியவர்கள் கூற்றையொத்த துரியோதனனே பீமனது ஆற்றலில் அழுக்காறுற்றவன்; அவனே பீமனுக்கு எகேனும் கேடு சூழ்ந்திருக்கவேண்டும்’ என்று ஐயுற்ருர்கள். பின்பு அவர்கள், சில நன்னிமித்தங் களே அறிந்த பெரியோர்'பீமன் ஆபத்தின்றி வருவான்' எனத் தேற்ற ஒருவாறு தேறியிருந்தார்கள். வாசுகியின் அரண்மனையிலிருந்து இளைப்பாறிய பீமனை நாகர்கள் தூக்கிக்கொண்டுவந்து கங்கைக் கரையில் சேர்த் தனர். பீமன், சூரிய கிாணத்தால் மலர்ந்த தாமரை மலர் போல் முகமலர்ந்து, சிம்மேறுபோல் அஸ்தினபுரத்திற் புகுந்து, குந்தி தேவிக்கும், துணைவர்கட்கும் வீடுமன் விது சன் முதலிய பெரியோர்க்கும் அங்கரத்திலுள்ள வேதி