பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரீக்ஷத்து. 57

  • 7,

ஞல் கடியுண்டு யமலோகம் சேர்வது திண்ணம் என்று சொன்னர். பரீகதித்து மன்னனைச் சபித்துவிட்டேனென்று சிருங்கி சொன்ன மொழிகளைக் கேட்ட மாத்திரத்தில் சமீகர் என் லும் அம்முனிவர் 'குழங்காய்' என்ன காரியஞ் செய்து விட்டாய்? ே செய்தது எனக்குச் சிறிதுக் தகுதியான தென்று தோன்றவில்லை; தவத்தோர்க்கு இதுபோன்ற செய்கை சால்புடையதன்று; நாம் அந்த அரசனது நாட் டில் வாழ்கின்ருேம்; இதுகாறும் யாம் யாதொரு இடை யூறும் எய்தாவண்ணம் அவனுல் பாதுகாக்கப்பட்டோம்; உலகத்தில் அாசரில்வழித் தவத்தோர் காரியம் சரியாய் மாதவர் நடைபெருது; தவமும் அரசியலில்வழி யில்லை நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல் இன்றெனில் இன்ரும் என்பவை அறிஞரது அறவுரையன்ருே? உல கம் ஒழுங்கீனமாய் நடக்குங் காலத்தில் அரசர் கமது கண்டத்தால் அதனை கன்னெறிப்படுத்துகின்ருர்கள்; எல்லாத் தர்மங்களும் அரசர்களாலேயே நடைபெறுகின் றன; அவர்கள் புரியும் வேள்வி முதலான புண்ணிய கரு மங்களாலேதான் மழை பொய்யாது பெய்யப் பயிர் பச்சை கள் செழித்து, உலகம் இன்புற்று வாழ்கின்றன. அரசர் களே உலகத்துயிர்கட்கு ஆதாரமாக விளங்குபவர்கள். ଜ୍ଯ : ர்கள் சில சமயங்களில் மக்கட்க இயல் இத்தகைய அரசர்கள் சில சமயங்களில் மக்கட்கு இயல் பாகவுள்ள முக்குண வசத்தால் முறை பிறழ்ந்து விடுதலுங் கூடும். நம் போன்ருேர் அதனே