பக்கம்:அன்பின் உருவம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

吕垒 அன்பின் உருவம்

ம்னத்தில் ஒருமைப்பாடு இருந்தால் மற்றவற்றிலும் ஒருமைப்பாடு இருக்கும். மனமோ ஒரு கணத்தில் பல் லாயிரங் கோடி சிந்தனைகளைச் செய்துகொண்டே இருக் கிறது. மனத்தைக் காற்றினுடைய தத்துவத்திலிருந்து பிறந்ததாகச் சொல்லுகிறது தத்துவ நூல். காற்று எப் பொழுதும் சலித்துக்கொண்டே இருக்கும்; ஓரிடத்திலே கில்லாது. மனம் என்பதே சலனத்தின் உருவம் என்று சொல்லிவிடலாம். மனம் என்று ஒரு தனிப் பொருள் இக் திரியங்களிளுலே தெரிந்துகொள்ள முடியாததாக இருக் கிறது. இயங்கும்பொழுதுதான் அது மனம் என்ற பெய ரைப் பெறுகிறது.

மனத்தை ஒருமைப்படுத்தி, அதனிடம் தோன் றுகின்ற எண்ணங்களே ஒருமைப்படுத்தி, அவற்றின் விளைவாகத் தோன்றுகின்ற பார்வை முதலியவற்றையும் வாக்கையும் ஒருமைப்படுத்திவிட்டால் அப்பொழுது நாம் செய்கின்ற செயல்களுக்கெல்லாம் பன்மடங்கு பயன் உண் டாகும். இறைவனுடைய திருவருள் இருந்தால் அன்றி இந்த கிலே நமக்கு வருவது இல்லை.

இறைவனுடைய திருவருள் எப்படிக் கிடைக்கும்? இறைவனுடைய திருவருளுக்காக ஏங்கி கின்று அன்பு செய்து பல வகையிலே சாதன செய்தால் அப்பொழுது அவனுடைய திருவருள் கிடைக்கும். கிடைத்த பிறகு நம் முடைய உள்ளமும் உரையும் ஏனேய இந்திரியங்களும் அடைகின்ற மாற்றம் மிக மிக அற்புதமானது. முன்னலே, எப்படி இருந்தோமோ அதற்கு கேர்மாருக இருப்போம். அப்பொழுதெல்லாம் இருந்தவாறு என்னே என்று வியப்பு உண்டாகும். . . . . -

இறைவனுடைய திருவ ரு ளி ைலே சிதறுண்ட மனத்தை ஒருமை நெறியில் இயக்கி, சிதறுண்ட வாக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/40&oldid=535462" இலிருந்து மீள்விக்கப்பட்டது