பக்கம்:அன்பின் உருவம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 அன்பின் உருவம்

"கேட்கலாம். நான் கேட்கும் பொருளெல்லாம் கொடுக்கிற மனிதன் இந்த உலகத்தில் இருக்கிருன?" என்று கேட்டார். -

"ஏன் இல்லை?” என்று நண்பர் சொன்னர், 'மனிதனுக்கு எத்தனே பேராசை என்று உமக்குத் தெரியாத்ா? யார் நமக்கு ஒரு பொருளேக் கொடுக்கிருரோ, அவருக்கே பல ஆசை இருக்குமே! தாமே குறைவுடையவர், குறையில்லாதபடி நமக்கு எப்படித் தருவார்?" என்று சொன்னர் அந்தப் பக்தர். - : "ஆண்டவனே வழிபடுகிறீரே; அவன் மாத்திரம் தந்து விடுவாளு?" என்று நண்பர் கேட்டார்.

"நிச்சயமாகத் தருவான். நாம் எதைக் கேட்கிருே மோ அவற்றையெல்லாம் தருவான். அந்த நம்பிக்கையோடு தான் எத்தனையோ பேர் ஆண்டவனிடம் அடைக்கலம் புகு கிருர்கள். யார் தன்னிடத்திலே வந்து பூசனை புரிந்து வழி படுகிருர்களோ அவர்களுக்கு எளியணுகி, அவர்கள் கேட் கின்ற எல்லாவற்றையும் கொடுக்கின்ற பெருவள்ளல் அல்லவா எம்பெருமான்? என்று மனம் உருக உருகப் பேசினர் அந்தப் பக்தர். - "எல்லாரும் அப்படிச் சொல்லக் காளுேமே, இறை வன் வாழ்க்கையில் சோதனையையே உண்டாக்குகிருன் என்றல்லவா பேசுகிருர்கள்?' என்ருர் நண்பர்.

அது அறியாதவர்கள் கூற்று. இறைவன் எல் லோருக்கும் எல்லாவற்றையும் தந்துவிடமாட்டான். அவன் பெரிய கள்வன். எல்லாருக்கும் மறைந்து கிற்கும் கள்வன். சாத்திரத்தை மாத்திரம் ஓதிக்கொண்டிருக்கிறவர்களுக்கு மறைந்திருப்பான். தோத்திரத்தை வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறவர்களுக்கும் மறைந்திருப்பான். ஆகமத்தை அறிந்தவர்களுக்கு அந்த ஆகமத்திற்குள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/24&oldid=535446" இலிருந்து மீள்விக்கப்பட்டது