பக்கம்:அன்பின் உருவம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. அன்பின் உருவம்

தளர்ந்து நெகிழ்ந்துபோகும். இது காதலின் அடையாளம். காதல் என்பது உள்ளத்தில் இருக்கிற குணம். பக்தியும் அத்தகையதே. அந்தக் குணங்கள் மலரும் போது உணர்ச்சி விஞ்சும். அப்போது உடம்பில் இத்தகைய விளைவுகள் ஏற்படும். இவை முயற்சியின்றித் தாமே வெளியாகின்றன; இவற்றையே மெய்ப்பாடுகள் என்று சொல்வார்கள். கோபம் உள்ளவனுக்குக் கண் சிவப்பது, சோம்பல் உள்ளவனுக்குக் கொட்டாவி வருவது, அச்சம் உள்ளவனுக்கு உடம்பு நடுங்குவது முதலியனவெல்லாம் உணர்ச்சியின் விளைவாக உடம்பிலே தோன்றும் மெய்ப்பாடுகள். இயற்கையாகத் தோன்றும் இந்த மெய்ப்பாடுகளோடு, நினைந்து செய்யும் செயல்களும் சேரும். செயல்களும் பேச்சும் உள்ளத்தில் மலர்ந்துள்ள உணர்ச்சியின் விளைவாக இருக்கும். மெய்ப்பாடுகள் இயற்கையாக அமைபவை; பேச்சும் செயலும் நினைந்து செய்பவை. உண்மையான உணர்ச்சியை இயற்கையான மெய்ப்பாடுகளிலிருந்து கண்டுபிடித்துக்கொள்ளலாம். காதலிக்கு உள்ள அன்பு போன்றதே இறைவனிடம் பக்தனுக்கு உள்ள அன்பும் இரண்டு உணர்ச்சிகளிலும் சில மெய்ப்பாடுகள் பொதுவாக அமையும்."

"மற்றவர்களும் இறைவனை நினைந்து கைகூப்புகிறார்கள்: வாழ்த்துகிறார்கள். அவை அன்பின் அடையாளங்கள் அல்லவா? -

"அன்பு காரணமாகக் கைகூப்புவதும் வாழ்த்துவதும் அன்பர்களிடத்திலே நிகழும். ஆனாலும் அன்பு இல்லாமலே இந்த இரண்டையும் செய்ய முடியும். இவை நினைந்து செய்கின்றவை. உண்மையான தாயும் தன் குழந்தையை அணைத்துக் கொள்கிறாள். அதனிடத்தில் உள்ள அணியைக் கவர விரும்புபவளும் அணைத்து"முத்தம் கொடுக்கிறாள். இருவருடைய செயல்