பக்கம்:அறநெறி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. நடுவு நிலைமை

கன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் (113)

திங்கன்றி நன்மையே தந்தாலும், நடுவு நிற்றலை ஒழிதலால் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக என்பது வான்புகழ் வள்ளுவர் வழங்கும் செய்தி யாகும்.

உலகில் வாழ்வோரில் இருவகை உள்ளனர். எப்படி யாவது வாழ வேண்டும் என்று எண்ணி வாழ்பவர் ஒரு வகை; இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்பவர் பிறிதொரு வகை. எப்படியாவது வாழலாம் என்பவர் நெறிமுறைகளைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவ தில்லை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பவர்கள் வயலுக்கு வரப்பமைத்து வாழ்பவர்கள்போல் நெறி முறைகளைப் போற்றி அவற்றின் வழியே ஒழுகு

பவர்களாவர்.

எப்படியாவது வாழலாம் என்பவர் வாழ்க்கை உடனடி வெற்றியினை நோக்கியதாகும்; இப்படித்தான் வாழ வேண்டும் என்று எண்ணுபவர் வாழ்க்கை, உடனடி வெற்றியினை நோக்காது அவ்வெற்றி என்னும் இலக்கை அடைய எடுத்துக்கொள்ளும் முயற்சியை-மேற்கொள்ளும் வழிமுறைகளைப் பற்றியதாகும்.

நம் நாட்டின் தந்தை அண்ணல் காந்தியடிகள் கூறுவார் : “நாம் மேற்கொள்ளும் இலட்சியம்-குறிக் கோள் மட்டும் உயர்ந்ததாக இருந்தாற் போதாது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/46&oldid=586924" இலிருந்து மீள்விக்கப்பட்டது