பக்கம்:அறநெறி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அறநெறி

‘நட்டார் மாட்டும் பகைவர் மாட்டும் ஒக்க நிற்கும் நிலைமையே நடுவுநிலைமை என்பர்.

இறைவனால் படைக்கப்பட்ட ஐம்பெரும் பொருள் கள் (பஞ்சபூதங்கள் நிலம், நீர், காற்று, தி, வான் என்பர். இவ்வைந்து பொருள்களையும் சற்று நோக்குவோம். தம்மை வெட்டித் தோண்டுபவரையே தாங்கி நிற்கிறது நிலம் (அகழ்வாரைத் தாங்கும் நிலம்). நீர் இன்னார் இனியார் என்னாமல் எல்லாாக்கும் தன்னைவழங்குகிறது. காற்று, இன்னவர் வேண்டியவ்ர், இன்னார் வேண்டாதவர் என்று பாடுபாடு காட்டி வீசுவதில்லை. எல்லோர்க்கும் ஒன்றாகவே வீசுகிறது. நெருப்பும் அவ்வாறே எவரிடமும் பாகுபாடு காட்டாமல் தன்னைச் சார்ந்தவர் அனைவரை யும் சுட்டுப் பொசுக்குகிறது. வானம், அதன் கூரையின் கீழ் உள்ள எல்லோர்க்கும் பொதுவாகவே காட்சி தருகின்றது இவ்வைம் பெரும் சக்திகளும் எவ்வாறு நடுவு நிலைமை பிறழாமல் இயங்குகின்றனவோ, அவ்வாறே மனிதனும் இயங்க வேண்டும் என்பது குறிப்பு.

ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்

திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்

வானத் தன்ன வண்மையும் மூன்றும்

-புறநானுாறு; 55:13-15

சூரியன் எல்லோரையும் சுடுகிறது; நிலா எல்லோரை யும் குளிர் விக்கிறது; வானம் எல்லோர்க்கும் மழை தருகிறது. இதுபோன்றே வாழ்க்கையில் ஒவ்வொருவரும் நம்மவர்-நமக்கு வேண்டியவர் என்கின்ற காரணத்தால் அவ்வொருவருக்காக நடுவுநிலைமையிலிருந்து பிறழ்ந்து விடுவதும், நமக்கு வேண்டாதவர் என்கின்ற காரணத்திற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/48&oldid=586926" இலிருந்து மீள்விக்கப்பட்டது