பக்கம்:அறநெறி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

பழந்தமிழ் இலக்கியங்களில் அறம்’ என்ற சொல் பெருக வழங்குகின்றது. நெல்லிக்காயைக் குறிப்பிடவரும் குறுந்தொகைப் புலவர் ‘அறந் தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்” என்கிறார். ‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ என்பது புறநானூறு. அறம் பாடிற்றே ஆயிழை கணவ என்று அறம்’ என்ற சொல் திருக்குறளிற்கு அந் நாளில் வழங்கப்பட்டிருக்குமோ என்ற ஆய்வை எழுப்பும் வகையில் புறநானூறு கூறுகின்றது.

சுருங்கச் சொன்னால் பழந்தமிழர் ←9ሃAD நாட்டமுடையவர்கள். ஊழிபெயரினும் தாம்பெயரா ராதலின் சான்றோர்கள் ஆவர். “அறநெறி பிறநெறி யினும் போற்றப்பட்டது என்பது சங்க இலக்கியங் களும் அறநெறி இலக்கியங்களும் காட்டும் உண்மை யாகும்.

இந்நூலுள் இடம்பெறும் பதினான்கு கட்டுரை களும் வானொலி, தொலைக்காட்சி முதலியன வற்றில் பேசப்பட்டவை; வாழும் நெறியை வகையுற உணர்த்தி நிற்பவை. எனவே எப்படியாவது வாழ வேண்டும் என்றில்லாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என்று வற்புறுத்தும் இக் கட்டுரைகள் தமிழ்ச் சமுதாயம் பின்பற்றத்தகும் செந்நெறி நன்னெறி எனும் கருத்தில் இந் நூல் எழுந்துள்ளது.

一明,um。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/5&oldid=586929" இலிருந்து மீள்விக்கப்பட்டது