பக்கம்:ஆண்டாள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

ஆண்டாள்


(திரு க. த. திருநாவுக்கரசு, தமிழ் நிலவு, ப. 53) என்பது ஒப்ப முடிந்த கருத்தாகும்.

பல்வேறு சமயங்களும் தொன்றுதொட்டு மக்களையும் சமுதாயங்களையும் ஆட்டி வந்திருக்கின்றன. ஆகவே சமயம் என்பதன் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியினையும் காணுதல் நலம் பயக்கும்.

எது சமயம்?

சமயம் அல்லது மதம் என்றதன் கருத்தை நாம் வரையறை செய்ய முயல்வது ஈண்டுத் தேவையற்றது. ஆயினும் வரையறை செய்வதானால் பழங்காலத்தொட்டு இன்றுவரை எல்லா நாட்டிலுமுள்ள எல்லாச் சமயங்களுக்கும் பொதுவா யிருக்கும் அடிப்பனடயான கருத்துகளைத் தொகுத்து வைக்க வேண்டியதாகும். "ஒருவரது கல்வியின் திறத்தையும் ஆராய்ச்சி வன்மையையும் மட்டுமே அவ்வகை இலக்கணமானது புலப் படுத்தும். முடிவில் ஏட்டுச் சுரைக்காயாகத் தான் அதனைக் கொள்ளுதல் வேண்டும். நமது சமூகங்களுக்கு அதனால் பலன் யாதும் விளையும் என்று சொல்ல முடியாது" என்பார் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் (தமிழர் பண்பாடு, ப. 150). ஆகவே, எவ்வகையான குறிக்கோள் களை மேற்கொண்டு இச்சமயங்கள் வழங்கி வந்தன என்பதை நோக்குதல் சாலும்.

வரலாற்று முறையிலேயே இந்தக் குறிக்கோள்களை நாம் அறிதல் வேண்டும். குறிக்கோள்களை இனம் காண்பதற்கு ஈண்டுப் பண்பாட்டு அடிப்படையில் சமயம் வளர்ந்த நிலையைத் தெளிதல் வேண்டும். விலங்கினத்திலிருந்து வேறுபடுத்தி மனிதனை மனிதனாக வாழ வைப்பது பண்பாடு. தம்மொடு தொடர்பு அற்றார்மேல் இயல்பாகச் செல்லும் உள்ள நெகிழ்ச்சியே அன்பாகவும் பண்பாட்டிற்கு அடிப்படை யாகவும் கொள்ளப் பெறுகின்றது. அந்த அன்புள்ளமே ஆண்டவன் தங்கும் உள்ளமாகும். "அன்பால் நினைவாரது உள்ளத்தே விரைந்து சேரலின் 'ஏகினான்' என இறந்தகாலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/12&oldid=565245" இலிருந்து மீள்விக்கப்பட்டது