பக்கம்:ஆண்டாள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

ஆண்டாள்


அவ்வெண்ணமும், செயலும் ஈடேறும் நன்னாளினை எதிர் நோக்குகின்றார். இடைநேரத்திலே கண்ணன் ஆயர்பாடியில் தோன்றியபோது ஆயமங்கையரோடு ஆடிய ஆட்டங்களை வரிசைப்படுத்தி, முறைப்படுத்தி எண்ணிப் பார்க்கின்றார்.

இறைவனையடைய விழைவோர்-அவனைக் கூட வேண்டுமென்னும் கொள்கையுடையோர் - அவன் அவதாரச் செயல்களையும், தன்மையியல்புகளையும், சிறுபெருங் குறும்புகளையும் எண்ணிப் பாடினால் அவனின் இன்னருள் இன்னே வாய்க்கும் என்பதை மன்பதையோர் கூறக் கேட்டவர் கோதையார். இதைச் செவியேற்ற, சூடிக்கொடுத்தார் தாமும் அவ்வாறே செயலாற்றும் பொழுது நல்ல வண்ணம் இறை சிந்தனையில் போக்கக் கருத்து கொண்டார். அந்நிலையில்,

நீர்க்கரை கின்ற கடம்பை ஏறிக்
காளியன் உச்சி நட்டம் பாய்ந்து
போர்க்கள மாக கிருத்தஞ் செய்த

---நாச்சியார் திருமொழி : 12:5.

காட்சி இவர் கண்ணுக்குப் புலனாகி, காட்சிவழித் தோன்றிச் சொல்லோவியமாய் மிளிர்ந்தது.65 இதன் காரணத்தான் நாச்சியார் திருமொழி நூற்று நாற்பத்து மூன்று பாடல்களாக வடிவங்கொண்டது.

பின்பு இவருடைய சிந்தனை ஆயர்மகளிரிடம் திரும்பியது. அவர்கள் நோற்ற மார்கழி நோன்பினை நினைத்தார். அதன் பயனைக் கருதினார். அந்நோன்பினை நோற்றுக் கண்ணனையடைய வழிகண்டார். அவ் ஆயர் மங்கையர் செய்கையால் செய்த மார்கழி நோன்பை இவர் பாவனையால் இயற்றிப் பயன் பெற்றார். இதனால்,

அன்ன வயல் புதுமை ஆண்டாள அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம்----இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை66
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/44&oldid=957615" இலிருந்து மீள்விக்கப்பட்டது